சான்பிரான்சிஸ்கோ:
சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு
வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி
பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக
உயர்ந்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய
மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ்-அப் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதன்
தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில்
உள்ளது. வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க
முடியாத ‘டிஜிட்டல் லாக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம்
ஹேக்கர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்
என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது