Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்த வாரத்தில் இந்த 4 ராசிக்காரர்கள் தான் டாப்... குருபகவானால் தேடிவரும் யோகம்
வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீருமா? அல்லது புதிய பிரச்சினைகள் வருமா? இந்த வாரம் எப்படி இருக்கும். 2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். சூரியன் கும்பம் ராசிக்கு மாறியுள்ளார். புதன் பகவான் வக்ரமடைகிறார்.
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் இருக்கும் என்பதை இந்த வார ராசி பலன்களில் கூறியுள்ளோம். 12 ராசிக்காரர்களும் ராசி பலனை படிங்க. இந்த வாரம் காலபைரவாஷ்டமி, ஏகாதசி, மாசி தேய்பிறை பிரதோஷம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசை போன்ற பல விஷேசங்கள் வருகின்றன. விரதம் இருந்து ஆலய தரிசனம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.
இந்த வாரம் உங்களுக்கு சந்தோஷம் அதிகம் நடக்கும். குரு மங்கள யோகம், குரு சந்திர யோகம் நடக்கிறது. வார துவக்கத்தில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. எந்த முக்கிய முடிவும் எடுக்காதீங்க. புதன் வக்ரமடைவதால் கவனமாக இருங்க முக்கிய முடிவுகளை எடுக்காதீங்க. இளைய சகோதரர்கள் சகோதரிகளிடம் வம்பு வழக்குகள் வேண்டாம். பணவரவு அதிகமாக இருக்கும். அதே நேரம் சுப செலவுகள் ஏற்படும். 18ஆம் தேதிக்கு மேல் நீங்க நினைத்தது நடக்கும். எதிரிகள் விசயத்தில் கவனமாக இருங்க. தாய்மாமன் உறவுகளிடம் பிரச்சினைகள் வரலாம் சொந்த பந்தங்களிடம் நிதானமாக பேசி பழகுங்கள். பூர்வீக சொத்து விசயங்களில் கவனம் தேவை. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கலைத்துறையினருக்கு ஜாக்பாட் கிடைக்கும். பண தேவைகள் அதிகமாகும். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் கவனத்தோடு இருங்க. வண்டி வாகனத்தில் நிதானமாக போங்க. பொறுமையும் நிதானமும் இருந்தால் இந்த வாரத்தை உற்சாகமாக கடத்தி விடலாம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை எழுதி பாருங்க. எச்சரிக்கையாக இருங்க. பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்துக்கங்க. தாய்வழி உறவினர்களால் பிரச்சினை வராமல் பாத்துக்கங்க. திருமணம் ஆகாமல் இருக்கும் சிங்கிள்ஸ்க்கு நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரிகள் முதலீடுகளை தவிர்த்து விடுங்க. முன்னெச்சரிக்கையோடு இருந்தால் நஷ்டத்தை தவிர்த்து விடுங்க. கால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை
இந்த வாரம் உங்களுக்கு சங்கடம் கொடுக்கிற கிரகங்கள் எதுவும் இல்லை. பண வரவு தாமதமாகும். பூர்வீக சொத்து விசயங்களில் சிக்கல் வரலாம். தாய் மாமன் மூலமாக பிரச்சினை வரலாம், அரசு அதிகாரிகளிடம் கவனமாக இருங்க. ராசி நாதன் சுக்கிரனால் நல்லதே நடக்கும். சந்திராஷ்டமம் 2 நாள் இருக்கிறது. 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கவனமாக இருங்க. முக்கிய முடிவுகளை எடுக்காதீங்க. பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்க. பணத்தை அதிகமாக முடக்காதீங்க. கலைத்துறையை சேர்ந்தவங்க புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடாதீங்க. புதன் வக்ரமடைவதால் செய்யும் செயல்கள் தாமதமாகும். அரசியல்வாதிகள் நட்பு ரீதியில் கவனமாக இருங்க. நண்பர்கள் எதிரிகள் ஆகலாம். பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் கவனமாக இருங்க வண்டி வாகனத்தில் போகும் போது விழிப்புணர்வு தேவை. குரு மறைந்திருக்கிறார் என்றாலும் குரு மங்கல யோகம் இருப்பதால் திருமண வாய்ப்பு கைகூடி வரலாம். இல்லத்தரசிகள் கவனம், எதிர்பாலினத்தவர்களிடம் கவனம் சின்னச் சின்ன அவமானங்கள் வரலாம் எச்சரிக்கை. ரகசியங்களை யாரிடமும் வெளியில் சொல்ல வேண்டாம். பயப்பட வேண்டாம் எதையும் தைரியமாக துணிச்சலாக பெரியவர்களின் ஆலோசனையுடன் முடிவு செய்யுங்கள். வியாபாரிகள் கவனமாக இருங்க. பெரிய அளவில முதலீடு வேண்டாம் வருமானம் எதிர்பார்க்கிற மாதிரி வராது. மாணவர்கள் எதையும் பொறுமையோடு நிதானமாக படிங்க. ஏகாதசி அன்றைக்கு பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வாங்க. மகாசிவராத்திரி நாளில் குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க பிரச்சினைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை
உங்க ராசியில் ராகு இருக்கிறார் அதுவே பல குழப்பத்தை தரும். களத்திர ஸ்தானத்தில் குரு சந்திர யோகம், சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகத்தோடு இருக்கிறது. உங்க ராசி நாதன் இந்த வாரம் வக்ரமடைகிறார். தடைபட்டு வந்த காரியங்கள் மட மடவென நிறைவேறும். அஷ்டம சனியால் வேலைகளில் நிதானம் தேவை. ரொம்ப கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்க இல்லாவிட்டால் அவமானங்களை சந்திக்க நேரிடும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையோடு இருங்க. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஆலோசனை பண்ணுங்க. வார இறுதியில் சந்திராஷ்டமம் வருகிறது. புதனும் வக்ரமடைவதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. பணம் தொடர்பான முடிவு எடுக்கும் போது கவனமாக இருங்க. நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் பணத்தை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். பங்குச்சந்தை முதலீடுகள் வேண்டாம். எவ்ளோ வருமானம் வந்தாலும் செலவு கூடவே வருதே என்று கவலைப்படுவீங்க. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் முன்பணம் அட்வான்ஸ் வாங்கிக்கங்க. இல்லத்தரசிகள் கவனமாக இருங்க அக்கம் பக்கத்தவர்களிடம் பேசும் போது நிதானமாக இருங்க நண்பர்கள், தோழிகளுடன் எச்சரிக்கையாக பேசுங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. வேலை செய்யும் இடத்தில் குழப்பங்கள் வரலாம். நிறைய கவலைகள் உங்களை வாட்டும் எனவே கவனத்தோடு இருங்க. தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் புத்தகங்கள் நோட்டுக்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த வாரம் பெண் தெய்வ வழிபாடு அவசியம் பண்ணுங்க. பிரதோஷ நாளில் நந்தி தேவரை வணங்குங்கள் பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை
புதன் வக்ரமடைவது உங்களுக்கு நன்மைதான். பணவரவு தாராளமாக இருக்கும். சுக்கிரன் சந்திரன், உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்கள். சனிபகவான் கண்டச்சனியாக இருப்பதால் பயம் ஏற்படும். தைரியமாக எதையும் எதிர்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதன் வக்ர நிலையில் இருப்பதால் பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பணத்தை முதலீடு செய்யும் முன்பாக ஆலோசனை பண்ணுங்க. இந்த வாரம் வெளிநாடு செல்ல யோகம் வருகிறது. நண்பர்கள், சொந்தக்காரர்களால் சில பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கை தேவை. சனி பகவான் பார்வை உங்க ராசியை பார்க்கிறார் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும். தேர்வு நேரங்களில் கவனமாக படிங்க. வார மத்தியில் கவனமாக இருங்க தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை சந்தோஷம்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக் கிழமை
உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய், குரு இணைந்திருப்பது சந்தோஷம். சந்திரமங்கள யோகம், குரு சந்திர யோகத்தை தரப்போகிறது. இந்த நாட்களில் நீங்க தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். வெற்றியை நோக்கிய பயணத்தை நீங்க ஆரம்பித்து விட்டீர்கள். சூரியன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது நன்மை என்றாலும் புதன் வக்ரமடைவதால் அரசியல்வாதிகள் கவனமாக இருங்க பதவி பறிபோக வாய்ப்பு உள்ளது தேவையில்லாத அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். குருவும் சனியும் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கிறது. புதன் வக்ரமடைவதால் வருமானமும் வியாபாரத்தில் லாபமும் குறையும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். நண்பர்கள் மூலமாகவோ, பெண்கள் மூலமாகவே வீண் பழி அவமானங்கள் வரலாம் கவனமாக இருங்க. எச்சரிக்கையோடு இருங்க தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் எதிர்பாலினத்தவருடன் எச்சரிக்கையாக பேசுங்கள். வரவேண்டிய வருமானம் தாமதமாகவே வரும். எந்த வேலை தொடங்கும் போது கவனம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பண முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். வேலையில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. கோபத்தை தவிர்த்து விடுங்கள். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு சுமரான வாரம். ரொம்ப முன்னெச்சரிக்கையோடு இருங்க. பெரியவர்கள் கிட்ட ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்க. குல தெய்வ வழிபாடு அவசியம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை
ரொம்ப நல்ல மனசுக்காரவங்க நீங்க. நிறைய நன்மைகள் நடக்கும். உங்க ராசி நாதன் வக்ரமடைகிறார். அவர் ஆறாம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டை நோக்கி வருவதால் சொத்துப்பிரச்சினைகளில் இருந்த சிக்கல்கள் தீரும். பூர்வ புண்ணியம் வலிமையடையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் யோகம் வரும். எதிரிகளின் பலம் குறையும் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றிகரமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கி விடும். வேலைக்கு செல்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான நேரம் வந்து விட்டது. திறமைக்கான பரிசுகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. முதலீடுகளால் லாபம் வரலாம். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்க. சிவராத்திரி நாளில் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் பண்ணுங்க நன்மைகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை
இந்த வாரம் தொழிலில் உள்ள சிக்கல்கள் நீங்கும் சுப செலவுகள் ஏற்படும். நிறைய வருமானம் வரும். கௌரவம் உயரும். பலமான வாரம் தைரியம், தன்னம்பிக்கை கூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வருமானம் உயரும். செவ்வாய் பகவானால் இளைய சகோதரர்கள் வகையில் பிரச்சினைகள் வரலாம். சகோதர சகோதரி உறவுகளில் கவனமாக இருங்க. தொழிலில் உள்ள சிக்கல்கள் நீங்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இது சுமாரான வாரம்தான். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கான காலகட்டம் இது. பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு புரமோசன் காத்திருக்கிறது. நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் கை கூடி வரப்போகிறது கோவில்களில் வைத்து பெண் பார்த்து முடிவு பண்ணுங்க. வியாபாரத்தில் லாபம் வருகிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். பெருமாள் கோவிலுக்கு போங்க. சிவராத்திரி நாளில் சிவ தரிசனமும் நன்மையை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை
அரசியல்வாதிகளுக்கு ரொம்ப நல்ல வாரம். பண வருமானம் இந்த வாரம் நன்றாக இருக்கும். புதன் வக்ரமடைவதால் தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் உச்சமடைவதால் மனைவி வழியில் சொத்து சேர்க்கைகள் ஏற்படும். எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் தொடர்பாக சில சிக்கல்கள் வரலாம். இளைய சகோதரர்கள் வழியில் சிக்கல்கள் வரலாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வேலை செய்பவர்கள் அலுவலக விசயமாக வெளியூர் வெளிநாடு செல்வதற்கான யோகம் வருகிறது பயன்படுத்திக்கொள்ளுங்கள். சூரியன் பத்தாம் வீட்டை பார்ப்பது லாபம். பெண்களுக்கு இந்த வாரம் நினைத்ததை சாதிக்கலாம். இல்லத்தரசிகள் எச்சரிக்கையோடு இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாராட்டு வரலாம். திருமணம் ஆகாத நபர்களுக்கு நல்ல தகவல்கள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு லாபம் வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.சொந்தக்காரர்கள் எச்சரிக்கையோடு இருங்கள். சிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்று வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை
சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. தடைபட்ட வருமானம் தடையில்லாமல் வரும். இதுநாள் வரை பட்ட அவமானங்கள் உங்களுக்கு ஒரு படிப்பினையை கொடுத்திருக்கும். சந்தோஷ தருணங்கள் இனி உங்களை தேடி வரும். மனதளவில் உடல் அளவில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் பல மடங்கு லாபம் வரும். அப்பா வழி உறவுகளினால் நன்மைகள் தேடி வரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறது. அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு லாபம் தேடி வரும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு இது வெற்றிகரமான வாரமாக அமைகிறது. பணம் பாக்கெட்டில் நிறையும், நீங்க நினைத்ததை சாதிப்பீங்க. அடகு நகையை மீட்பீர்கள். புதிய தங்க நகைகள் சேரும், வேலைக்கு செல்பவர்களுக்கு புரமோசன் தேடி வரும். கூடவே சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். திருமண முயற்சிகள் சுபமாக இருக்கும். ராசியில் கிரகங்கள் இணைந்து உங்க ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை குல தெய்வ கோவிலில் வைத்து முடிவு பண்ணுங்கள். நினைத்ததை சாதிக்கும் வாரம் இது. கால பைரவரை வணங்குங்கள் நன்மைகள் நடக்கும். பாராட்டுக்கள் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள் : திங்கள்கிழமை
மகரம் ராசிக்காரர்களுக்கு இது மகத்தான வாரம். உங்களின் கவுரவம் அதிகமாகும். சூரியன் உங்க வாக்கு வன்மையை அதிகரிப்பார். எதிரிகள் தொல்லை நீங்கும். சுப செலவுகள் கூடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். நிலம் விற்பனை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாகும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நிறைய லாபம் வரும். நீங்க நினைத்ததை சாதிக்கலாம். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். ரொம்ப கோபப்படாதீங்க. பொறுமையாக இருங்க. மனக்குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சொந்த பந்தங்களினால் நன்மைகள் நடக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது பயன்படுத்திக்கொள்ளவும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாரம். பண வருமானம் அதிகமாக இருக்கும். வியாபரிகள் புதிய தொழில் தொடங்கலாம் லாபம் வரும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். புதன் வக்ரமாக இருப்பதால் இப்போதைக்கும் திருமணம் தொடர்பான முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். ஏகாதசி நாளில் பெருமாள் கோவிலுக்கு போங்க நல்லதே நடக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 09
அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக்கிழமை
நீங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய வாரம். புதன் வக்ரமடைந்து பின்னோக்கி வருவதால் யாரிடமும் குடும்ப ரகசியங்களை பேசாதீங்க. குரு பகவானால் நிறைய லாபம் வரும். செய்யும் தொழிலில் நிறைய நன்மைகள் நடக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு கட்டும் யோகம் கைகூடி சந்திரன் சஞ்சாரம் சந்தோஷத்தை தரும். கடல்கள், ஆறு குளங்களில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருங்க. பூர்வீக சொத்துப்பிரச்சினை ஏற்படும். விசா தொடர்பாக கவனம் தேவை. கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல வாரம் என்றாலும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான வாரம். சின்னச் சின்ன சிக்கல்கள் வரலாம். இல்லத்தரசிகள் மனக்குழப்பத்தோடு இருப்பீங்க. வேலைக்கு செல்பவர்கள் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்க. வேலைகளை கவனமாக பண்ணுங்க. சொந்த பந்தங்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. திருமணத்திற்கு இப்போதைக்கு முயற்சி பண்ணாதீங்க. புதன் வக்ர நிவர்த்தி ஆன பின்னால் பேச தொடங்கலாம். எதையும் யோசித்து பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு பண்ணுங்க புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். நண்பர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். சிவராத்திரி நாளில் குல தெய்வத்தை வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள் : திங்கள் கிழமை
சுக்கிரன் உங்க ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எதையும் துணிச்சலாகவும் தைரியமாகவும் முடிவு எடுப்பீர்கள். கிரகங்கள் உங்களுக்கு நன்மையை தருகிறது. புதன் வக்ரம் உங்களுக்கு நன்மையை தரும். மனக்குழப்பங்கள் நீங்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும். பணம் உங்களை தேடி வரும். தேவையில்லாத மனக்குழப்பம் நீங்கும். தொழிலில் லாபம் வந்து உங்க பாக்கெட்டை நிரம்பும். கடன் பிரச்சினை நீங்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். தடைகள் நீங்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. இல்லத்தரசிகள் பெண்களுக்கு ரொம்ப நல்ல வாரம். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். தங்க நகைகள் சேர்க்கை அதிகமாகும். அப்பா வழியில் சுப காரியங்கள் நடைபெறும். திருமண யோகம் கைகூடி வருகிறது. சொந்தத்தில் வரன் அமையும் தைரியமாக முடிவு செய்யலாம். மாணவர்களுக்கு நிம்மதியான வாரம் படிப்பில் உற்சாகம் அதிகமாகும். திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு போங்க. சிவ பெருமான் அருள் உங்களுக்கு நல்லதை கிடைக்கச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறம் :ப்ரவுன்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









