ஜோதிடத்தில்
செவ்வாய் கிரகம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றார். தற்போது செவ்வாய்
விருச்சிகராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். தனுசு
ராசியில் பிப்ரவரி 8 முதல் மார்ச் 22, 2020 வரை செவ்வாய் சஞ்சரிக்கிறார்.
இந்த காலத்தில் மேஷம், ரிஷபம்,கடகம், மகரம் ராசியினருக்கு சில சங்கடங்கள்,
சிரமங்கள் தரலாம்.

செவ்வாய் பகவான்
அங்காரகன் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாவார். அங்காரகன் என்றால் சிகப்பு நிறைத்தவன் என்பது பொருள். பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். மேஷம், விருச்சிக ராசிக்கு அதிபதியாவார்.
செவ்வாய் வலிமையான கிரகம், பூமி காரகனாவார். இவர் பலம்பெற்றிருந்தால் வீடு மற்றும் வாகன யோகத்தை தருவார்.
இதுவரை விருச்சிக ராசியில் இருந்த செவ்வாய் தற்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கின்றார். ஏற்கனவே சனி, குரு, கேது ஆகிய கிரகங்கள் உள்ள நிலையில், தற்போது செவ்வாய் அவர்களுடன் சேர்கிறார்.
செவ்வாய் தனுசு ராசியில் அமர்ந்து 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்கு அதிபதியாக செவ்வாய் உள்ளார். இவர் இதுவரை ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்த நிலையில் தற்போது ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார்.
பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணியில் மாற்றங்கள் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்.
பாக்கிய ஸ்தானமாக அமைவதால் பொருளாதாரம் வலுப்பெறும். நிதி நிலை சீராக இருக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும்.
வழிபாடு: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கந்த சஷ்டி படித்து வர நன்மை உண்டாகும்.
ரிஷபம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதனால் ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். மன அழுத்தம் உண்டாகுதல் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்பதால் மிக கவனம் தேவை. வண்டிகளில் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், வண்டி ஓட்டும் போது கவனமும், நிதானம் தேவை.
முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள். செவ்வாய் குடும்ப, தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் பண வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும்.
இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தில் செவ்வாயின் பார்வை விழுவதால் தைரியம் கூடும். இருப்பினும் எது வேலை செய்தாலும் அதில் திருப்தி இருக்காது. இருப்பினும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வயிறு சார்ந்த உபாதைகள் வந்து நீங்கும். சிறு உடல் பிரச்னைக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள நன்மைகள் உண்டாகும்.
வழிபாடு: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசி மாலை அணிவித்து வழிபடவும்.
மிதுனம்

மிதுனம்
செவ்வாய்
உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானமான களத்திர
ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இதனால் அடிக்கடி உணர்ச்சி வசப்படக்கூடிய சூழல்
உருவாகும். உஷ்ண கிரகம் களத்திரத்தில் இருப்பதால் பேச்சில் அனல் பறக்கும்.
மனைவியிடம் வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம்.
தொழில்
மற்றும் கூட்டாளி ஸ்தானம் என்பதால் தொழில், உத்தியோகம் செய்யும் இடத்தில்
மேலதிகாரிகளிடம் சண்டை வரலாம். இதனால் பேச்சில், செயலில் நிதானம் தேவை.
வயிறு சார்ந்த பிரச்சினைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை அவசியம். செவ்வாயின் பார்வையால் உங்கள் ராசிக்கு திருமண தடை நீங்கும்.
அவரது
எட்டாம் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது இருப்பதால் பெற்றோரின்
உடல் நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். மன
அழுத்தம் அதிகரிக்கலாம்.
வழிபாடு: செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வர துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.