வாழ்வென்ற விளையாட்டு
புரியாத வயதில் ஆடிய ஆட்டமெல்லாம்
தள்ளாடும் வயதுவரை கூடவே பயணிக்கும் வேறுவிதமாய்!
அறியாத பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததெல்லாம் பதிவாகி இருக்கும் மனதிற்குள் ஓரமாய்!
சமயங்கள் வாய்க்கையில் மீண்டுமொருமுறை உண்மையாய் ஆடுக என்றே வாழ்வு நம்மிடம் இயம்பும்!
கண்ணாமூச்சியில் ஓடிஒளிந்ததும்
ஒத்தைக்காலில் நொண்டி அடித்ததும் ஓட்டப்பந்தயத்தில் முந்தி ஓடியதும்
பந்தினை உதைத்துக் கூடிஆடியதும்
ஒருகுடம் தண்ணீரூற்றி

ஒரேபூ பூத்ததும்
திண்ணையிலமர்ந்து
பல்லாங்குழி ஆடியதும்
ஏழாங்கல்லிலே தோழியை வென்றதும்
........................................................................அடடா அடடா எத்தனை விளையாட்டு!
எத்துணை மகிழ்ச்சி!
மழலைப்பருவம் கடந்தும் விளையாட இயலாதபோதும் விளையாட்டு நம்முடனேதான் பயணிக்கிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
வாழ்வில் ஒருவரையொருவர் முந்தும்போதெல்லாம்
ஓட்டப்பந்தயம் ஆடுகிறோம்!
வரவுசெலவு பார்த்துபார்த்து வாழ்க்கையில் செல்லும்போதெல்லாம்
பல்லாங்குழி ஆடுகிறோம்!
எதிர்ப்புகளைத் தாங்கும்போதெல்லாம்
கால்பந்தாகவே மாறுகிறோம்!
ஆகமொத்தத்தில் நம்வாழ்வே ஒரு விளையாட்டரங்கம்தானே!
த.ஹேமாவதி
கோளூர்