இதற்கு என்ன காரணம் ஏன் 22 ம் தேதியை தேர்வு செய்து அவ்வாறு கூறினார் என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு பலரும் தங்களுக்கு தெரிந்த தகவலை கூறிவரும் நிலையில் தற்போது ஜோதிடர்கள் தங்கள் பார்வையை முன்வைத்துள்ளனர்.
அதனால் தான் கோயில்களில் பெரிய மணிகளை கட்டி, ஒலிக்கச் செய்தனர். மணியோசையின் அதிர்வுகள் சுற்றுபுறத்தில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க வல்லவை. மோடிக்கு இதுபற்றி ஏதோ நிபுணர் நல்ல யோசனை தெரிவித்துள்ளார். எனவே தான், மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்ட சொல்லி உள்ளார் மோடி.
நிச்சயம் இது வேலை செய்யும். மார்ச் 24 அன்று அமாவாசை. இது நெருங்கி வருவதால் நாளையே இருள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நாட்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் தீய சக்திகள் வேகமாக இருக்கும். இதுபோன்ற நாளில் இருட்டுவதற்கு முன்பு மாலை 5 மணிக்கே 130 கோடி மக்களும் ஒரே நேரத்தில் கை தட்டினால் நாடு முழுவதும் பெருமளவு அதிர்வு ஏற்படும். இது தீயவற்றை அழித்து, நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பலன் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா அறிவியல் ஆன்மீகம் இரண்டையும் நேசிக்கும் மக்கள் கொண்ட நாடு தற்போது அறிவியல் இதுவரை கைகொடுக்காத நிலையில் ஆன்மீக நம்பிக்கைகள் நம்மை காக்கும் என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர், மேலும் இந்த நேரத்தில் அரசு எடுக்கும் முடிவிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பது கொரனவை விரட்ட தீர்வாக அமையும் என்கின்றனர் வல்லுநர்கள்.
நாளை நாமும் வீட்டில் இருந்தே ஒத்துழைப்பு கொடுப்போம் !









