தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 24-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் முடிவடைய உள்ளன. இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்புக்கு மார்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதனால் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்தன. தொற்று பரவல் தீவிரமானால் பத்தாம் வகுப்புக்கு மட்டுமாவது பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. பாமக நிறுவனர் ராமதாஸும் இதனை வலியுறுத்தி இருந்தார்.
எனினும் வரும் நாட்களில் நிலவும் சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









