பிள்ளைகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை வரச்சொல்லி அவர்களின் நேரத்தை விரயமாக்கி அவர்களின்
அப்படியானால் கொரானா சாதாரணமானதா?
அல்லது ஆசிரியர்கள் சாதாரணமானவர்களா?
சாதாரணமானவர்கள் இங்கு யாருமில்லை. எவருடைய பாதுகாப்பும் இங்கு கிள்ளுக்கீரை இல்லை.
அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது - உண்மையான அக்கறை.
மோடி சொல்வது போல் அடையாளக் கைதட்டல் அல்ல;
இந்த நேரத்தில் அது அர்த்தமற்ற ஓசை! இதை மருத்துவர்களே சொல்கிறார்கள்...
வளரும் தலைமுறையோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் நினைத்தால் வெறுமனே ‘பாராட்டும் அரசை’த் தூரத் தள்ளி மக்களைப் ‘பாதுகாக்கும் அரசைக்’ கொண்டு வரமுடியும்.
கொரானா குறித்து மற்றவர்கள் அச்சப்படட்டும்! நாம் கோபப்படுவோம்!








