School Morning Prayer Activities - 03.03.2020 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


School Morning Prayer Activities - 03.03.2020 :

_20180701_211806

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்வி

திருக்குறள்:395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

விளக்கம்:

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களே உயர்ந்தவர். அவ்வாறு கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

பழமொழி

Divinity  that shapes our end.

 இறுதி முடிவு இறைவன் கையில்.

இரண்டொழுக்க பண்புகள்

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.

பொன்மொழி

பிறை மீண்டும் பூர்ண சந்திரன் ஆவது போல் நம் குறைகளும் விடாமுயற்சியால் முழுமையாகும் ...

____சாரதாதேவி

பொது அறிவு

1. தமிழ் நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் எங்கு உள்ளது?

கடலூரில் உள்ள பிச்சாவரம்

2. சதுப்பு
நிலக்காடுகளுக்கு மற்றோரு பெயர் என்ன?

அலையாத்திக் காடுகள்

English words & meanings

Gilt - a thin covering of gold. மெல்லிய பொன் முலாம் பூசப்பட்ட.

guilt - the bad feeling when you realise you did something wrong. குற்ற உணர்வு.

ஆரோக்ய வாழ்வு

அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. இதை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம்.

Some important  abbreviations for students

VIRUS - Vital Information Resources Under Siege

UMTS - Universal Mobile Telecommunications System

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

கீரிப்பிள்ளை

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். பல வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

அதனால் ஒரு கீரிப்பிள்ளையை எடுத்து தன் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வெகுகாலம் கழித்து பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு சுந்தரி குளக்கரைக்குச் சென்றாள். செல்லும் முன் தன் கணவனிடம் குழந்தை தூங்குகிறது அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தையைக் கீரி கடித்துவிடப் போகிறது என்று கூறிவிட்டுச் சென்றாள்.

குயவனுக்கு திடீர் தாகம் ஏற்பட தண்ணீர் அருந்த சமையலறைக்குள் நுழைந்தான். அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. அதைப் பார்த்தக் கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள். அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டது என்று தவறாக நினைத்து ஆத்திரத்தில் சுந்தரி அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடிச்சென்றுப் பார்த்தாள்.

குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தது. பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

அடடா! பாம்பைக் கொன்றுவிட்டு இரத்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே! என்று கண்ணீர் விட்டுக் கதறினாள்.

சிறு கணநேரத்தில்  நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை கேட்டு அறிந்துக் கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.
நீதி :
பதறிய காரியம் சிதறும்

இன்றைய செய்திகள்

03.03.20

◆சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் ஒன்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது.

◆வெயிலின் தாக்கத்துக்கு இடையே மிதமான குளிர்காற்று- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

◆தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கைக்கான கூட்டம் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

◆பெண்கள் தினத்தன்று அரசுப் பள்ளிகளில் சிறுமிகளே வகுப்புத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

◆மத்திய மெக்சிகோவின் மைக்கோகன் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் 3000 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய எரிமலை ஒன்று உருவாகி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விஞ்ஞானிகள் இதனை மறுத்து வருகின்றனர்.

◆இந்தியாவின் மிக வேகமான வீராங்கனை என்று பெயர் பெற்றுள்ள டூட்டி சந்த், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

◆மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ரபேல் நடால், மகளிா் பிரிவில் ஹீதா் வாட்ஸன் ஆகியோா் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினா்.

Today's Headlines

🌸A brick wall has been discovered for the first time in the sixth phase of excavations in Keezhadi near Thirupuvanam in Sivagangai district.

 🌸 Tourists swarm into Kodaikanal as the temperature was mild and pleasant against the hot climate.

 🌸Official Review Committee Meeting of Tamil Nadu Legislative Assembly   has been decided that the meeting for the grant request will be held from March 9 to April 9.

 🌸The central HRD department said that girls should be class leaders in government schools on women's day.

 🌸Over 3,000 small earthquakes have occurred in central Mexico's Michoacan state in the last two months.  Experts say a new volcano is being developed.  But scientists are denying this.

 🌸Dutee Chand, who is known as India's fastest runner, won gold in the 200 meter run of the Calo India University Games.

 🌸Rafael Nadal won the men's category at the Mexico Open tennis, and Heather Watson won the women's title.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H