வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றுவதன் மூலம் தங்களது வாட்ஸ் ஆப்பை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
சமூகவலைதளங்களில் பிரதானமான ஒன்றாக கருதப்படுவது வாட்ஸ் ஆப், தற்போது
வாட்ஸ் ஆப் என்பது மிக முக்கியமான செயலியாக உருவெடுத்துள்ளது. இந்த செயலி
அலுவலகம் முதல் குடும்பங்கள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சம்
சமூகவலைதளங்களை பொருத்த வரையில் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் பெரும்பாலானோர்
தங்களது சுய விவரங்களை குறிப்பிட்டு இருப்பார்கள். இதன்மூலம் தங்களது
அனுமதியின்றி தங்களது முழுவிவரங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளலாம்.
அதேபோல் தங்களின் போன் நம்பர் தெரிந்தால் போதும் நீங்கள் வைக்கும்
ஸ்டேட்டஸ், புகைப்படம் என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல்
ஹேக்கர்கள் ஊடுருவலும் நடக்கலாம் எனவே பாதுகாப்பு என்பது மிக முக்கியம்.
அழைபேசி சேமிப்புகளை கண்காணிப்பது அவசியம்
உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் அனைவரையும் வரவேற்க வேண்டாம். உங்கள்
காண்டெக்ட்டில் இருந்து பொருத்தமற்ற நபர்களை நீக்குவது நல்லது. அதேபோல்
தேவையில்லாத நபர்கள் அல்லது முகம் தெரியாத நபர்களை பிளாக் செய்து வைப்பது
நல்லது. அதேபோல் அவ்வப்போது தங்களது காண்டெக்ட்டில் தேவையில்லாம சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் நம்பரை டெலிட் செய்வது நல்லது.
முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?
சுயவிவரம் புகைப்படம் என்பது அவசியம்
வாட்ஸ் ஆப்பில் டிபி, புரைபல் இமேஜ் எனப்படும் சுயவிவரப்படத்தை பாதுகாப்பாக
பயன்படுத்துவது சிறப்பு. அதேபோல் தங்கள் வைத்திருக்கும் படம் தங்களது
முழுவிவரத்தையும் எடுத்துச் சொல்பனவாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக
இருக்க வேண்டும்.
சுயவிவரப் படத்தை யார் காணலாம் என்ற தனியுரிமை
ஏனெனில் உங்கள் வாட்ஸ் ஆப் சுயவிவர புகைப்படத்தை உங்கள் தொடர்பு பட்டியலில்
உள்ள அனைவராலும் காணலாம். இருப்பினும், உங்கள் சுயவிவர புகைப்படத்தை யார்
காணலாம் என்பதற்கு தனியுரிமை விருப்பங்களும் உள்ளன.
மூன்று முறைகள் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்
எல்லோரும் (அதாவது அனைத்து வாட்ஸ் ஆப் பயனர்களும்), எனது தொடர்புகள்
(உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள்) மற்றும் குறிப்பிட்ட நபர்கள் (இது
எந்த புகைப்படத்தையும் காண்பிக்காது). இதன்மூலம் தங்களின் சுயவிவரப்
புகைப்படத்தை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
ஸ்டேட்டஸ் பாதுகாப்பு அம்சம்
ஸ்டேட்டஸ்-ல் நமது குடும்பத்தோடு வெளியே சென்றது, நண்பர்களோடு சென்றது என
அனைத்தையும் பதிவிடுகையில் பாதுகாப்பு தேவை. இதை status with everyone
என்று காண்பிக்கும். இதன்மூலம் தங்களது ஸ்டேட்டஸை அனைவரும் காணலாம்.
ஸ்டேட்டஸ் இதன்மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்
அதேபோல் தனது காண்டெக்ட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் காண்டெக்டில்
உள்ளவர்கள் பார்க்கும் படி வைக்கலாம். அதேபோல் இதிலும் தேவையில்லாதவர்களை
நிரந்தரமாக பிளாக் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும்
பார்க்கும்படி அவர்களின் பெயரை டிக் செய்து வைக்கலாம்.
வாட்ஸ் ஆப் குரூப் பாதுகாப்பு அம்சம்
தங்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் யாரும் வேண்டும் இணைக்கும்படி பயன்படுத்த
வேண்டாம். யாராவது ஒரு நபர் மூலமாக தேவையில்லா நபர்கள் குழுவில் வந்தால்
அது மிகவும் ஊடுருவல்களை ஏற்படுத்தும். எனவே வாட்ஸ் ஆப் குழுவை பாதுகாப்பாக
பயன்படுத்த வேண்டும்.