ஒரு குழிக்குள் ஒரு ஓணான் விழுந்து விட்டது.
விழுந்த ஓணான் வயதான ஓணான். ஒரே நேரத்தில், அதிக தூரம் ஏறமுடியாத ஓணான்.
கால்பிடிப்புச் சரியாக இல்லாமல், அடிக்கடி சறுக்கி விழுந்தது.
அந்த ஓணான் மேலே வர முயன்றது. குழியின் ஆழம் இருபது மீட்டர். ஓணான் ஒருமணி நேரத்துக்கு இரண்டு மீட்டர் தூரம் ஏறும். பிறகு< ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் உறுதியாகப் பிடித்துக்கொண்டு நிற்க முடியாமல், ஒரு மீட்டர் சறுக்கி விழும். பிறகு, மீண்டும் அதே வேகத்தில் ஒரு மணிக்கு இரண்டு மீட்டர் ஏறும். மீண்டும் ஒரு மீட்டர் சறுக்கிக் கீழிறங்கி விடும். இவ்வாறு ஒரு மணிக்கு இரண்டு மீட்டர் ஏறி, ஒரு மீட்டர் இறங்கினால், அது அந்தக் குழியிலிருந்து வெளியே வர, எவ்வளவு நேரமாகும் என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்!
விடைகள்:
பத்தொன்பது மணி நேரம்.
குழியின் ஆழம் இருபது மீட்டர். ஓணான் ஒரு மணி நேரத்தில் இரண்டு மீட்டர் ஏறி, ஒரு மீட்டர் சறுக்கிவிட்டால், அது ஒரு மணி நேரத்துக்கு ஒரு மீட்டரே ஏறுகிறது. பதினெட்டு மீட்டர் ஏற, பதினெட்டு மணி நேரமாகும். பத்தொன்பதாம் மணி நேரத்தில் இரண்டு மீட்டர் ஏறி, மேலே வந்துவிடும். பிறகு கீழே சறுக்க வழியில்லை. அதனால் ஓணான், குழியி லிருந்து வெளிவர மொத்தம் பத்தொன்பது மணி நேரமாகும்.