2. கூட்டலாம் பெருக்கலாம்
2 லிருந்து 9 க்குள் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள் நினைத்த எண்ணை 9 ஆல்
பெருக்குங்கள் பெருக்கி வரும் விடியிலுள்ள இரு இலக்கங்களையும் கூட்டுக
அதனுடன் 120 ஐ கூட்டுக. இப்போது வரும் விடை 129. இதனைக்கொண்டு உங்கள்
நண்பர்களை இன்னும் வியப்படையச்செய்ய வேண்டுமெனில் உங்கள் புத்தகத்தில் 129
ஆம் பக்கத்தில் என்ன பாடம் உள்ளது என்று முன்பே பார்த்து வைத்துக்கொண்டு
விடையைக்கூறாமல் என்ன எண் விடையாக வருகிறதோ அந்த பக்கத்தைப் பார்
குறிப்பிட்ட பாடம் இருக்கும் எனக்கூறி வியப்பிலாழ்த்தலாம்.
(கருத்து : 2 லிருந்து 9க்குள் எந்த எண்ணை 9 ஆல் பெருக்கினாலும் வருகின்ற விடையிலுள்ள எண்களைக்கூட்டினால் 9 தான் விடையாக வரும் அதனுடன் 120 ஐக்கூட்ட விடை 129 என்றே கிடைக்கும். எ.கா.{ ( 2 X 9 = 18. 1+8 = 9 , 9 + 120 = 129), ( 3 X 9 = 27, 2+7=9, 9+120=129) } இதுபோல மற்ற எண்களையும் செய்து பாருங்கள்.
( நான்கு முதல் எட்டு வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பொதுச்செயல்பாடு )
(கருத்து : 2 லிருந்து 9க்குள் எந்த எண்ணை 9 ஆல் பெருக்கினாலும் வருகின்ற விடையிலுள்ள எண்களைக்கூட்டினால் 9 தான் விடையாக வரும் அதனுடன் 120 ஐக்கூட்ட விடை 129 என்றே கிடைக்கும். எ.கா.{ ( 2 X 9 = 18. 1+8 = 9 , 9 + 120 = 129), ( 3 X 9 = 27, 2+7=9, 9+120=129) } இதுபோல மற்ற எண்களையும் செய்து பாருங்கள்.
( நான்கு முதல் எட்டு வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பொதுச்செயல்பாடு )
3. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
விடை:
11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
4.ஆளுக்கு பாதி
குமாரும் மணியும் பள்ளிக்கு போகிற வழியில ஒரு ரூபாய் கீழே கிடந்தது.
குமார்தான் முதல்ல பார்த்து மணிகிட்ட சொன்னான் உடனே மணி அதை
எடுத்தான்.ஆளுக்கு 50 காசு எடுத்துப்போம் என்று குமார் சொன்னான். நான்தானே
எடுத்தேன் அதனால எனக்கு 10 காசு அதிகமா வேணும் என்றான் மணி. சற்று யோசித்த
குமார் சரி என்றான். அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டனர். இப்போது
குமாரிடம் எத்தனை பைசா மணியிடம் எத்தனை பைசா இருக்கும் சொல்லுங்கள்.
விடை: 50+ 50 = 100 , இப்போது மணிக்கு 10 பைசா அதிகம் கொடுக்கவேண்டும்
என்றதும் குமாரிடமிருந்து மணிக்கு 10 பைசா கொடுத்துவிடலாம் என்றுதான்
அனைவரும் கூறுவார்கள். அப்படிக்கொடுத்தால் குமாரிடம் 40 பைசாவும் மணியிடம்
60 பைசாவும் இருக்கும். இது சரியா அவன் 10 பைசாதான் அதிகமாகக்கேட்டான்
ஆனால் இப்போது அவனிடம் 20 பைசா அதிகமாக உள்ளது. 10 பைசாதான் அதிகமாக
இருக்கவேண்டும் என்று கூறி சரியான விடையைக் கணுபிடிக்கத் தூண்ட வேண்டும்.
ஒரு 5 லிட்டர் கேனும், ஒரு 8 லி கேனும் மட்டும்தான் உங்களிடம் உள்ளது
ஒருவருக்கு 2லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டும் இருக்கின்ற கேன்களை
வைத்துக்கொண்டு எவ்வாறு கொடுக்கலாம்?
விடை: 5 லிட்டர் கேனில் எண்ணெயை ஊற்றி அதை 8 லிட்டர் கேனில்
ஊற்றவேண்டு.மீண்டும் அதேபோல் செய்தால் 8 லிட்டர் கேனில் இன்னும் 3 லிட்டர்
மட்டுமே கொள்ளும்.இப்போது 5 லிட்டர் கேனில் மீதம் 2 லிட்டர் இருக்கும்.