லவகை உணவுகளில் இருக்கும்
புரோட்டீன் கட்டமைப்புகளை, ‘உடலுக்கு தீங்கு செய்பவை’ என்று உடலே தவறாக
உணர்ந்து, அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவிடுவதே ‘புட் அலர்ஜி’
ஆகிறது.
அலர்ஜியை உருவாக்கும் உணவுப்பொருட்கள்?
‘அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமை, தூசு,
புகை, மாசு மூலம் உருவாகும். சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினால் தோன்றும்
இத்தகைய அலர்ஜியால், தும்மல், இருமல், மூச்சிறைப்பு போன்றவை உருவாகும்.
உடலுக்கு பொருந்தாத உணவுகளாலும் ஒவ்வாமை ஏற்படும். அதை ‘புட் அலர்ஜி’ என்று
கூறுகிறோம். அப்போது சருமத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் உருவாகும்.
வயிற்றில் விவரிக்க முடியாத அவஸ்தைகள் தோன்றும். ஆஸ்துமா போன்ற சுவாச
தொடர்புடைய நோய்களையும் ‘புட் அலர்ஜி’ உருவாக்கும்.
சிலவகை உணவுகளில் இருக்கும் புரோட்டீன் கட்டமைப்புகளை, ‘உடலுக்கு தீங்கு
செய்பவை’ என்று உடலே தவறாக உணர்ந்து, அதற்கு எதிரான நடவடிக்கைகளை
எடுத்துவிடுவதே ‘புட் அலர்ஜி’ ஆகிறது. உணவுக்கு நிறம், மணம், ருசி போன்றவை
கிடைக்க சேர்க்கப்படும் ரசாயன பொருட்களும் அலர்ஜிக்கு காரணமாக இருக்கின்றன.
புட் அலர்ஜி இரண்டு விதமாக வெளிப்படும். ஒன்று: உணவு உண்ட உடன் எதிர்
விளைவுகளை உருவாக்குவது. இரண்டு: அலர்ஜியின் அறிகுறிகளை மெல்ல மெல்ல
வெளிப்படுத்துவது. இந்த இருவகை பாதிப்புகளும் யாருக்கும், எப்போது
வேண்டுமானாலும் ஏற்படலாம்.







