அடிக்கடி தலைமுடியை மொட்டை அடித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 24 April 2020

அடிக்கடி தலைமுடியை மொட்டை அடித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா...

<
அடிக்கடி தலைமுடியை மொட்டை அடித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா...
எல்லாருக்கும் தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் கண்ட கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கூந்தல் பராமரிப்பு க்ரீம்களை வாங்கி தேய்ப்பது, அடிக்கடி ஷாம்பு மாற்றுவது, வீட்டு வைத்தியங்கள் என்று நாமும் எதை எதையோ ட்ரை பண்ணி பார்ப்போம். இதுல கொஞ்சம் பேர் ரொம்ப யோசித்து அடிக்கடி மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
மக்களிடையே அடிக்கடி தலைமுடியை வழிப்பதால் முடி நன்றாக வளரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இது உண்மையா என்ன? கண்டிப்பாக கிடையாது என்கிறார்கள் நம்முடைய சரும மருத்துவர்கள். உங்களுடைய முடி வளர்ச்சிக்கும் மொட்டை அடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
<
குழந்தையாக இருக்கும் போது கூட அடிக்கடி மொட்டை போட்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற போக்கு இன்றளவும் நம் மக்களிடையே காணப்படுகிறது.

நீங்கள் தலைமுடியை ஷேவிங் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது. எனவே மொட்டை அடிப்பது உங்க முடி வளர்ச்சியை அதிகரிப்பதில்லை. முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் சரும மருத்துவர்கள். ஆனால் மொட்டை அடிப்பதால் சில நன்மைகளும் கிடைக்கின்றன என்கிறார்கள் மக்கள் .

அடிக்கடி மொட்டை அடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

* பொடுகு பிரச்சினையின் அபாயத்தை குறைக்கிறது.
* தலையில் தேங்கியுள்ள தூசிகள், அழுக்குகள் எல்லாம் ஷேவிங் செய்வதால் வெளியேற்றப்படுகிறது
* ஆண்கள் மொட்டையடிப்பதால் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
* தலைமுடியை ஷேவிங் செய்த பிறகு முடி வளர்ச்சி அதிகமாகிறது. காரணம் தலைமுடியை ஷேவிங் செய்யும் போது வளர்ச்சிக்கு இடையூறாக முடியில் இருந்த அழுக்குகள், தூசிகள் எல்லாம் நீங்குகின்றன. அதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதற்கும் எந்த அறிவியல் சான்றும் இல்லை.

<
கூந்தலின் வளர்ச்சி எப்படி நடக்கிறது?
முடியின் வளர்ச்சியை பற்றி பேசுவதற்கு முன் அது எவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். நம்முடைய தலையில் உள்ள ஒரு முடி அதன் உண்மையான நீளத்தை அடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் உடலில் இருக்கும் முடிகள் வளர்வதை விட தலையில் இருக்கும் முடிகள் சீக்கிரமாக வெளியே வரும்.
நமது முடியின் வளர்ச்சி தோல் அடுக்கின் கீழே உள்ள மயிர்க்கால்களில் இருந்து ஆரம்பமாகிறது. முடியின் வேர்கள் உருவாக புரதம் மற்றும் இரத்தம் தேவைப்படுகிறது. முடியின் வேர்களில் இருந்து புறப்படும் முடிகள் அப்படியே வளர்ந்து மயிர்க்கால்கள், செபாசியஸ் சுரப்பிகள் (சரும எண்ணெயை சுரக்கும்) வழியாக செல்கிறது. இந்த சரும எண்ணெய் முடியின் வளர்ச்சிக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து உதவுகிறது. இந்த எண்ணெய் தான் நம் தலைமுடி தடினமாகவும், நீளமாகவும் வளர உதவி செய்கிறது.

உண்மை என்ன?

<
நீங்கள் தலைமுடியை மொட்டை அடிக்கும் போது அல்லது ஷேவிங் செய்யும் போது முடியை எடுப்பதோடு அதன் மீதுள்ள இறந்த செல்களையும் நீக்குகிறீர்கள். இந்த ஷேவிங் மேற்பரப்பில் மட்டுமே நடைபெறுகிறது. எனவே இதனால் முடியின் அமைப்பிலோ அல்லது முடியின் நிறத்திலோ அல்லது வளர்ச்சி விகிதத்திலோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே தலையை மொட்டை அடிப்பதால் புதிய முடி வளர்ச்சியை பாதிக்காது, அதே நேரத்தில் புதிதாக மயிர்க்கால்களும் உருவாகாது. இருக்கின்ற மயிர்க்கால்களில் இருக்கும் முடிகளே வளரும்.

ஷேவிங் செய்தால்
கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது கட்டுக்கதை மட்டுமே. எனவே முடி வளர்ச்சியை தூண்ட அடிக்கடி மொட்டை அடிப்பது ஒரு நம்பிக்கையற்ற ஒன்று. அதற்குப் பதிலாக முடி ஆரோக்கியத்தை தூண்டும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் கூந்தல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

3 comments:

 1. உனக்கு theriyuma motai அடித்தல் முடி வளராது என்று. போடா நீயும் உன் blog um. Scientific proof irukku motai adithal mudi athigamaga valarum endru.

  ReplyDelete
  Replies
  1. It's true? Or not, surely hair will grow

   Delete
  2. Yes bro ur correct
   I have experienced

   Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.
https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H