♦♦கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் எளிமையான முறையில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை பெறுவதற்கு வகை செய்யும் பிரத்யேக செயலி சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
♦♦கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக கருதுபவர்கள், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட உதவிகளை எளிமையாக பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் பிரத்யேக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
♦♦கொரோனா மானிட்டரிங் ஆப் எனும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு, சென்னை மாநாகராட்சியின் இனையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பின் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு செல்போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், இந்த செயலிக்குள் லாகின் செய்து தங்களை செல்பி எடுத்து பதிவிட்டால் போதும்.
♦♦சென்னை மாநகராட்சியின் மருத்துவக் குழுவினர், செல்பி பதிவிட்டவரின் லொகோஷனை டிராக் செய்து அவர்கள் இருக்குமிடத்திற்கு நேரில் செல்வார்கள். தொடர்ந்து செல்பி பதிவிட்டவரை பரிசோதித்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா அல்லது சாதாரண உடல் நலக் கோளாறா என்பதை ஆய்வு செய்து கண்டறிவார்கள்.
♦♦தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா அல்லது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா என்பது குறித்தும் முடிவெடுப்பார்கள்.
♦♦பொதுமக்களுக்கும் மாநகராட்சிக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த செயலி மூலம் ஆரம்ப கட்டத்திலேயே தொற்றை கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...