இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும் இன்றய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும் இன்றய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.



இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும் இன்றய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.

1 மக்களே முடிந்து நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும் இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.

2 கூடியவரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள் மால் மற்றும் சூப்பர்மார்கெட் களை தவிர்த்து விடுங்கள்

3 Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெறுக்கினார்கள் ஊரடங்கு சயமத்தில் எல்லாம் காணாமல் போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களை தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

4 நகை கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களை தொட்டு உள்ளது ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகை கடைகளை அக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே இந்த 2 மாத நஷ்ட கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை.ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்

5 திரை அரங்குகளை புறக்கணியுங்கள் எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூட செய்யவில்லை இந்த ஊரடங்கு முடிந்த  நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம் அதற்க்கு பால் ஊற்றவும் வேண்டாம் ஏன் என்றால் அந்த தகுதி அவர்களுக்கு இல்லை.2000 ரூபாய்க்கு கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெற போவதில்லை.ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம். 

6 பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள் படி படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களை காப்பாற்றுங்கள்.

7.  வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள் ஏன் அரசாங்கம்  விதித்த BS 4 வாகனங்கள் நிறைய உள்ளன அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதி மன்றம் மூலமாகவோ அல்லது  வேறு விதமாகவோ discount என்கிற பெயரில்   RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களை பொறுத்தவரை ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்து கட்டி விடுவார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம்.

8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவி கூவி விற்பார்கள் இதனால் நஷ்டம் நமக்கே என் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்க செய்வார்கள் ஜாக்கிரதை ஒரு வருடம் மொபைல் வாங்க வில்லை என்றால் நமது குடி முழுகி போயிடாதது.

9 மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்த பொருள்களை வாங்குங்கள் அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி விடாதீர்கள் .

10. கடன் அட்டை (Credit Card )உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள் வரவு எட்டணா செலவு பத்தான என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.

11. குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வறுத்தாதீர்கள் என் friend  I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள் விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.

இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம் அதை கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கி கொள்ளலாம் ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற புரட்சி தலைவரின் பாடல் வரிகள்  இன்னும் வருடத்திற்கு நமக்கு தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.

சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும்.ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.

கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண்முன்னே காண போகிறோம் ஜாக்கிரதை விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டு கொண்டு சாலையில் செல்ல வேண்டாம் என் என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாக பயன் படுத்தி கொண்டு திருட்டு செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H