Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள்: பொது தேர்வு ஏற்பாடுகள் அறிவிப்பு :10 students in one exam:
ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள்: பொது தேர்வு ஏற்பாடுகள் அறிவிப்பு :10 students in one exam:
ஒரு தேர்வறையில், 10 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்படுவர் என்பது உள்ளிட்ட,
பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான
ஏற்பாடுகளை, அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
* ஒவ்வொரு தேர்வறையிலும், 10 மாணவர்கள், சமூக இடைவெளியுடன் அமர
வைக்கப்படுவர் * பத்தாம் வகுப்பு மற்றும், 11ம் வகுப்பு மாணவர்கள், அவர்கள்
படிக்கும் பள்ளியிலே, தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, தேர்வு நாளன்று
பயன்படுத்த, 46.37 லட்சம் முகக் கவசங்கள், இலவசமாக வழங்கப்படும்
* தேர்வு மையங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தால்,
அம்மையங்களுக்கு, மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நோய்
கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு தேர்வு
மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து, பயணம் செய்து வரும்
மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக, வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டு, முதன்மை தேர்வு மையங்களில், தனி அறையில் தேர்வு
எழுத அனுமதிக்கப்படுவர்.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், வெளியில் செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்கப்படுவர்.
* சிறப்பு தேர்வு மையங்களுக்கு செல்ல, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தனியாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.
* விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில், ஒரு அறையில், எட்டு பேர் மட்டுமே அமர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வர்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியே, ஐந்து
தொடர்பு எண்கள், உதவி எண்களாக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு,
எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மாணவர்களின் தேர்வு நுழைவு சீட்டில்,
அச்சடித்தும் வழங்கப்படும் .
* மாணவர்கள், பெற்றோர் தங்கள் சந்தேகங்களை, காலை, 8:00 மணியில் இருந்து, மாலை, 6:00 வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
* தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
* வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து, தேர்வு எழுதுவதற்காக,
ஊருக்கு திரும்பும் மாணவர்களும், பெற்றோரும், அனுமதி சீட்டு இல்லாமல்,
சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்விலக்கு, தேர்வு மற்றும்
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
* தேர்வு எழுதும் மாணவர்கள், புதிதாக தேர்வு நுழைவுச்சீட்டை,
கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். பள்ளிக்கு
சென்று, தலைமை ஆசிரியரிடமும் பெற்றுக் கொள்ளலாம். நோய் கட்டுப்பாட்டு
பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, நேரடியாக நுழைவுச்சீட்டு
வழங்கப்படும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








