12-ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் பணி மே 27-ம் தேதி முதல் தொடங்கும்
என்றார். தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மாணவர்களுக்கு தேவையான
சுகாதார வசதிகள் செய்து தரப்படும். பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த
முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு என்ன
அவசரம்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு பெற்றோர்,
மாணவர்கள் மனதில் மேலும் பதற்றம் உருவாக்கும். தேர்வு தேதி அறிவிக்கும்
முன்பு ஆசிரியர்-பெற்றோர் சங்க பிரதிநிதிகளோடு பரிசீலிக்கப்பட்டதா?
பெற்றோர் மாணவர்களை மனரீதியாக தயார் படுத்திய பின்பு தேர்வு அறிவிப்பதே
சரியாக இருக்கும். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின் தேர்வு நடத்துவதே
சரியானது. எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக
அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.