
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுத்தாள் மதிப்பிடும்
பணி ஆசிரியர்களின் வீடுகளி்ல் இன்று தொடங்குகிறது. தேர்வுத்தாள்
ஆசிரியர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்
ஆசிரியர்களின் வீடுகளில் தேர்வுத்தாள்களை ஒப்படைத்து வீடுகளிலேயே
தேர்வுத்தாள் மதிப்பிடும் பணியைத் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம்
அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும்
ஆசிரியர்களுக்கு தேர்வுத்தாள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.
ஏறக்குறைய 10, 12-ம் வகுப்பில் 1.50 கோடி தேர்வுத்தாள்கள் ஆசிரியர்களின்
வீடுகளில் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ நாடுமுழுவதும் 3 ஆயிரம்
சிபிஎஸ்சி பள்ளிகள் மதிப்பீடு மையத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த
பள்ளிகளில் குறைந்தபட்ச மதிப்பீடு பணிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளுக்கான தேர்வுத்தாள்கள் மதிப்பீடு
பணிக்காக ஆசிரியர்களி்ன் வீடுகளுக்கே வழங்கப்படும். தேர்வுத்தாள்
திருத்தும் பணி நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும். 50 நாட்களுக்குள் இந்த ப
ணிகளை முடித்துவிடுவோம்.
உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி
சிபிஎஸ்இ
மண்டல அலுவலங்கள் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் எந்தவிதமான
கட்டுப்பாடுமின்றி செயல்படலாம், சிவப்பு மண்டலத்தில் மட்டும் சில
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக
சிபிஎஸ்இ
தேர்வுத்தாள் திருத்தும் பணி தாமதமடைந்தது.அதுமட்டுமல்லாமல் இன்னும் 29
பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்த வேண்டியிருக்கிறது. இந்த தேர்வுகள் வரும்
ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. ஜூலை மாதம்
நடத்தப்படும்
இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்து, தேர்வுத்தாள்
திருத்தப்பட்டபின்புதான் ஒட்டுமொத்த முடிவுகளும் அறிவிக்கப்படும் என
மனிதவளத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த 29 பாடங்களுக்கான
தேர்வு முடிவுகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் இறுதியில்தான் வெளியாகும் எனத்
தெரிகிறது. அதாவதது ஐஐடி நிறுவனம் ஜேஇஇ அட்வான்ஸ் மெரிட் பட்டியலை
வெளியிடும் முன்பாக வெளியாகும்