திருவாதிரை நட்சத்திரம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் “திரு”
என்ற அடைமொழி கொடுத்து கூறப்படுவது இரண்டு நட்சத்திரங்களாகும். அவற்றில்
ஒன்று “திருவாதிரை” மற்றொன்று “திருவோணம்”.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே
கூறவேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை அழகாகச் செய்து முடிக்கக்
கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நண்பர்கள் அதிகம் உண்டு.
இவர்களது பேச்சினால் எல்லோரும் கவரப்படுவர் என்பதே இதற்கு காரணம். இந்த
நட்சத்திரக் காரர்களிடம் பேசி ஜெயிப்பது என்பது இயலாத செயல். பேச்சாற்றல்
மிக்க இவர்களை எளிதில் ஏமாற்றவும் முடியாது. மற்றவர்களின் நம்பிக்கைக்கு
பாத்திரமாக இருக்கும் இவர்களை நம்பி எந்தச்செயலிலும் இறங்கலாம்.







