எல்லா நாளும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. கிரகங்களின்
சஞ்சாரம் சிலருக்கு நன்மை செய்யும் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சனிக்கிழமை தினம் யாருக்கு நன்மையை ஏற்படுத்தும் யாருக்கு பாதிப்பை தரும்
என்று பார்க்கலாம். மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்
வாயை மூடி மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது.
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசியில சந்திரன் இருக்குறதுனால, நீங்க
செய்ய நினைக்குற வேலையில தடங்கல் ஏற்படலாம். கவனமா இருக்குறது நல்லது.
பிசினஸ்லயும் கொடுக்கல் வாங்கல் பண்றதுல கொஞ்சம் எச்சரிக்கையா, நிதானமா
நடந்துக்குறது நல்லது. உத்தியோகத்துலயும் கவனமா இருக்க பாருங்க. மத்தவங்களை
நம்பி புது முயற்சி எதுலயும் இறங்காதீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த
சமயத்துல வீட்டை விட்டு வெளிய வர்றதை தவிர்க்க பாருங்க. பண விவகாரத்துல
இன்னிக்கு கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற மனஸ்தாபம்
உண்டாகலாம். நிதானமா நடந்துக்குறது நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு
கூட்டாளிங்களால நல்லது நடந்துடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை
வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால
சந்தோஷம் கூடிடும். உத்தியோகத்துல ப்ரமோஷன் கிடைக்குறதுக்கு
வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை
மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இனனிக்கு முக்கியமான வி.ஐ.பி.க்களோட அறிமுகம்
கிடைச்சிடும். நகை நட்டுன்னு வாங்கிடுவீங்க. கல்யாண சுபகாரிய
பேச்சுவார்த்தையில நல்ல பலன் கிடைச்சிடும். ரொம்ப நாளா இழுத்துக்கோ
பறிச்சிக்கோன்னு இருந்த கடன் பாக்கி இன்னிக்கு வசூலாகிடும். பிசினஸ்லயும்
நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும்.
ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை
கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கிட்ட
கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துக்கிட்ட, தேவையில்லா பிரச்சனை வராம
தவிர்த்துடலாம். சொந்தக்காரங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்கும்.
குடும்பத்துலயும் சந்தோஷம் கொடுக்குற மாதிரியான இனிய சம்பவங்கள்
நடந்துடும். பிள்ளைங்களாலும் இன்னிக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு பிள்ளைங்க மூலமா வீண் செலவுங்க வர்றதுக்கு
வாய்ப்பு இருக்கு. சம்பளம் வர்ற வரைக்கும், பணத்தை எண்ணி எண்ணி
செலவழிச்சா, பண நெருக்கடி வராம தவிர்த்துடலாம். பிசினஸ்ல மறைமுக
எதிரிங்களோட தொல்லை ஏற்படலாம். எச்சரிக்கையா நடந்துக்கோங்க. இன்னிக்கு
நீங்க ரொம்பவே மந்தமா ஃபீல் பண்ணுவீங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல்
கவனத்தோட இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு திடீர் பண வரத்து இருக்கும். கணவன்
மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். உத்தியோகத்துலயும்
இன்க்ரீமெண்ட்டுக்கு யோகம் இருக்கு. செய்யுற முயற்சிங்கள்ல வெற்றியும்
கிடைக்கும். குடும்பத்துலயும் எல்லாருமே ஒத்துமையா இருப்பாங்க. இன்னிக்கு
உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 50
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை
துலாம்
துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு பண வரத்து இருந்தாலும் கூடவே தண்டச்
செலவுங்களும் கூடவே வந்து நிக்கும். மாணவர்கள் படிக்குறதுல ஆர்வம் இல்லாம
இருப்பாங்க. அநாவசியமா வெளியூர் பிரயாணம் செய்யுறதை அவாய்ட் பண்ணுங்க.
சொந்தக்காரங்களால சந்தோஷம் கூடும். ஹெல்த் கண்டிஷனை பொறுத்த வரைக்கும்
ரொம்பவே டல்லா, மந்தமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல வேலைச்சுமை குறையலாம்.
பிள்ளைங்களால உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கவர்மெண்ட் மூலமா
எதிர்பாத்த உதவி கிடைக்கும். பிசினஸ்லயும் இதுவரை இருந்துவந்த மந்தநிலை
மாறி, நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். இன்னிக்கு சுபச் செலவுங்களும்
இருக்கும். இருந்தாலும், இன்னிக்கு மன சஞ்சலத்தோடவே இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை
தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு தண்டச் செலவுங்களை தவிர்த்துட்டு கொஞ்சம்
சிக்கனமா இருக்குறது நல்லது. கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும்.
உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட கெடுபிடி டென்ஷனை கொடுக்கும். ரொம்ப
நெருக்கமானவங்க கிட்ட வீண் வாக்குவாதம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.
எச்சரிக்கையா இருக்க பாருங்க. பண வரத்து இருந்தாலும், செலவுங்களும்
கட்டுக்கடங்காம இருக்கும். கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை
மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற நெருக்கம் கூடும்.
கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியூர் போறதை அவாய்ட் பண்றது நல்லது.
கூடப்பொறந்தவங்க சப்போர்ட்டால, இன்னிக்கு உங்களோட பிரச்சனைங்களும் காணாம
போகும். வீட்டுலயும் ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப அமோகமா இருக்கும். இன்னிக்கு
காலையிலேயே நல்ல செய்தி வந்து மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை
கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு சுப காரிய பேச்சுவார்த்தைங்க வெற்றிகரமா
முடியும். கணவன் மனைவிக்குள்ளாற ஒத்துமை கூடும். குடும்பத்துலயும்
எல்லோருமே குதூகலமா இருப்பாங்க. புதுசா பிசினஸ் பண்ற முயற்சிங்களுக்கு
வெளியில இருந்து உதவி கிடைக்கும். செய்யுற வேலையிலயும் ரொம்ப ஆர்வமா
இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை
மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு பண வரத்து சுமாரா தான் இருக்கும். அதனால
அநாவசிய ஆடம்பர செலவுங்களை அவாய்ட் பண்றது நல்லது. உத்தியோகத்துல சீனியர்
அதிகாரிங்களால தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கவனமா
இருக்க பாருங்க. இருந்தாலும் கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு சப்போர்ட்டா
இருப்பாங்க. இன்னிக்கு பிள்ளைங்க மூலமா நல்லது நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை