ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதே தவிர கட்டுக்குள் வந்த பாடில்லை. இதற்கிடையில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
🛑பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு தொடர்பாக இந்தக்கூட்டத்தில் முதல் மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.









