
கொரோனா வைரஸ்
சென்னை:
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில்,
தமிழகத்தில் இன்று மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக
உயர்ந்துள்ளது. சென்னையில் அதிக அளவாக 1,493 பேருக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.
இன்று 1,438 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 53 பேர்
உயிரிழந்தனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றவர்கள். இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.







