அரசு பஸ் மோதி, இறந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, கடலுார் கோர்ட் உத்தரவிட்டது.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் ஒபிலியன், 45; முதலியார்பேட்டை
அரசு நடுநிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்தார். இவர், 2017 பிப்.,
1ல், சென்னை - கும்பகோணம் சாலையில் காரில் சென்றார். கடலுார் மாவட்டம்,
மருவாய் தரைப்பாலம் அருகே, எதிரில் வந்த அரசு பஸ் மோதிய விபத்தில்,
ஒபிலியன் உயிரிழந்தார். இழப்பீடு கோரி, அவரது குடும்பத்தினர், கடலுார்
சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த
நீதிபதி இருதயராணி நேற்று தீர்ப்பளித்தார்.
இதன்படி, 'இறந்த ஒபிலியன் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்
கழகத்தின், விழுப்புரம் கோட்டம், 50 சதவீதம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
நிறுவனம், 50 சதவீதம் என, ௧ கோடியே, 94 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க
வேண்டும்' என, உத்தரவிட்டார்.