இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புமாறு மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழக உயர் கல்வித் துறை சார்பில் இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வுகளை எப்போது நடத்துவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை. ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோரால் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை செலுத்த இயலாத நிலை உள்ளது. தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து இருப்பு நிதி வைக்கப்படுவது உண்டு. ஆசிரியர்களுக்கு அந்த இருப்பு நிதியை பயன்படுத்தி ஊதியம் வழங்கலாம்.