கவலைப்படவேண்டாம்...பொதுவா இளவயது சாதனையாளர்கள் பின்னாளில் மிக கஷ்டபடுவார்கள் என சொல்வதுண்டு.
லட்சுமண் சிவராமகிருஷ்ணன், நரேந்திர ஹிர்வானி...17. 19 வயதில் புகழின் உச்சியை அடைந்தார்கள். வீழ்ச்சியும் அதே போல விரைவாக வந்தது. போரிஸ் பெக்கர் 17 வயதில் விம்பிள்டனை வென்றார். அடுத்த சில ஆண்டுகளில் வீழ்ச்சி...மீண்டு எழ 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அதன்பின்னும் பெரியதாக சாதிக்க இயலவில்லை.
டென்டுல்கர், கமல் மாதிரி சிலர் தான் இளவயது ஜீனியஸை தொடர்ந்து தக்கவைத்தவர்கள்.
ஆனால் பலரும் லேட்டாக கெரியரில் இறங்கி வெற்றி பெற்றவர்களே....தொட்டதெல்லாம் தோல்வி, அவமானம் என பல பத்தாண்டுகள் கழியும். அதன்பின் ஒரு மிகப்பெரிய பிரேக், அதன்பின் வெற்றி.
அவர்கள் தோல்விகளில் துவளும் ஆண்டுகள் அனைத்திலும் சேர்க்கும் அனுபவம் தான் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது...அத்தனை தோல்விகள் இன்றி அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது.
ஜான் ஃபென் என்பவர்...50வது வயதில் யேல் பல்கலைகழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அது கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயது. பெரிதாக எதையும் கண்டுபிடித்தபாடில்லை. யேல் பல்கலைகழ்கம் 70 வயது வரை பொறுத்துக்கொண்டது. அதன்பின் அவரை நிர்ப்பந்தித்து வேலையை விட்டு அனுப்பியது.
வெளியே போனவர் ரிடையர் ஆகாமல் வர்ஜினியா காமன்வெல்த் கல்லூரி எனும் சின்ன கல்லூரியில் சேர்ந்தார். அதன்பின் அங்கே வைரஸ்களை அளக்கும் டெக்னிக் ஒன்றை கண்டுபிடித்தார். மிகவும் புகழ்பெற்ற அந்த ஆய்வுக்கு அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. அதை வாங்குகையில் அவரது வயது 70களில்...
அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது என்பதை யேல் பல்கலைகழகத்தில் யாரும் நம்பவே இல்லை..அவரது லேபுக்கு கொடுக்கப்ட்ட இடத்தை பிடுங்கி, அதில் பணியாற்றிய அசிஸ்டெண்டுகளை எல்லாம் இடம் மாற்றி அவரை வேலையை விட்டு துரத்தியிருந்தார்கள்.
அப்படி 70 வயதில் வேலையை விட்டு விரட்டப்பட்டவர் ஊர் பேர் தெரியாத கல்லூரியில் சேர்ந்து நோபல் பரிசு வாங்கினார் என தெரிந்தால் அதிர்ச்சி அடையமாட்டோமா என்ன?









