அதன்படி,
* 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.
* 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.
* புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.
* மாணவர்கள் உள்ளூர்க் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய மென்பொருட்கள் உருவாக்கப்படும்.
* 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும்
* 12-ம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி கற்பிக்கப்படும். * பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.
* சட்டம், மருத்துவப் படிப்புகளைத் தவிர்த்து உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த வாரியம் அமைக்கப்படும்.
* எம்.பில். படிப்பு நிறுத்தப்படுகிறது.
* நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும்.
* கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
* தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது விருப்பத் தேர்வு மட்டுமே, கட்டாயமல்ல.
* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிக்கலாம்.
புதிய கல்விக்கொள்கை 22 மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








