தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
அனைவருக்கும் வணக்கம்.
AZ தலைப்பில் ஊதியம் பெறுவது குறித்த தகவல்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி
உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு
மே மாதம் வரை மட்டுமே ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைத்துள்ளது.
ஜுன் மாத ஊதியமே உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை.
ஆனால் மற்ற கருவூலங்களில் இது தொடர்பான Pay bill அனுமதிகப்பட்டு ஆசிரியர்கள் ஊதியம் பெற்றனர்.
காரணம் கொரானா நோய்தொற்று காலம் என்பதால் அனுமதியளித்திருக்கலாம். மனிதாபிமான செயல்.
இதுதொடர்பாக
மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் கோரிக்கையானது நமது இயக்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது. *இயக்குனர் அவர்களும் ஊதியம் விரைவில் கிடைக்க உடனடியாக உத்தரவிட்டார்கள்.
இருந்தும் கொரானா நோய்தொற்று தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் ஊதியம் பெற ஆணை இதுவரை கிடைக்கப்பெறவில்லை
AZ தலைப்பில்
ஊதியம் பெறுவது தொடர்பான அனைத்து பணிகளும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகையால் வருகின்ற வாரம் (ஜூன் மாதம் முதல் ஊதியம் பெற) ஆணை கிடைக்கலாம் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.
அ.சுந்தரமூர்த்தி
மாநில
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.








