நற்காலை வணக்கம்.
இன்றைய உலகில் போலியாக நடிப்பவர்களுக்கு தங்க கோப்பை...
உண்மையாக இருப்பவர்களுக்கு வெண்கல கிண்ணம்.
சுவையான பிரியாணி மனைவி கையால சாப்பிட ஆசையா...?
கறி எடுத்து கொடுத்திட்டு மதியம் உங்க அப்பா வராறாம்னு மட்டும் சொல்லிடுங்க...!
கட்டணமில்லா
கழிப்பிடங்களைக் கூட
தர முடியாத மக்களாட்சி
கட்டணமில்லா
கல்வியும் ,மருத்துவமும்
எங்கே தந்து விடப் போகிறது.
காச கரியாக்குற ஊர்
சிவகாசி.
கரிய காசாக்குற ஊர்
நெய்வேலி.
வாழ் நாளில் ஒரு முறையேனும்.....
செத்து பிழைக்க ஆசை...
எனக்கென அழுதவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட ஆசை.
உங்களிடம் ஒன்றும் ,
பிறரிடம் ஒன்றும் , பேசுபவர்களிடம் விலகியே இருங்கள். அவர்கள் தான் உங்களைப் பிடித்த
"ஏழரை சனி ".
ஆடி மாதம் பிரித்துக் கூட்டி போய் விட்டார்களே என்ற கவலையில் புது மாப்பிள்ளைகள்....
கூட்டி போக வில்லையே எனும் கவலையில் பழைய மாப்பிள்ளைகள்..😄
வீட்டு வைத்தியம்.
மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி ,முட்டியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் ,முதுகு வலி ,உடல் பலவீனம், போன்ற பிரச்சனைகள் சரியாகி விடும்.
பொது தகவல்.
90 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு
மியான்மர்.
பெ.சுந்தரமூர்த்தி.தஆ.
தி.மலை. ஒன்றியம்.
24.7.2020.வெள்ளி.









