மாணவர்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை.
1.முதலாவதாக மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து ஒழுங்குமுறை பழகவேண்டும். அதற்கு அடுத்தாற்போல் பாடம் படிப்பதாகும்.
*மாணவர்களுக்கு பெரியார்
விடுக்கும் பொது வேண்டுகோள்*
2.நம் மாணவர்களிடையே கட்டுப்பாடு, ஒழுக்கம் இருக்க வேண்டும்.
பகுத்தறிவை மறந்து விடாதீர்கள். எந்த காரியமானாலும், எவ்வளவு முக்கியமானாலும், எந்த நிலையில் இருந்தாலும், ஏன்? எதற்கு? எதனால்? என்று சிந்தித்துப் பார்த்து எதையும் செய்ய முற்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அருங்குணங்கள்:
3.ஒழுக்கம்,
நாணயம்,
நேர்மை,
மற்றவர்களுக்கு
நன்மை பயத்தல்,
பிறருக்கு ஊறு
செய்யாமல்
இருத்தல்.
4. அறிவுப்பெருக்கம்
நிறைந்த நல்ல கருத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும். இதுதான் பிற்கால வாழ்க்கை வெற்றிக்கு வழிகோலும்.
5.படிப்பது அறிவுக்குத்தான்.
அறிவும் கட்டுப்பாடற்ற சுதந்திர சிந்தனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் சிறந்த அறிவைக் கல்வியாகவும், அனுபவத்தையே வாத்தியாராகவும் கொள்ள வேண்டும்.
6.நமது மாணவர் சமுதாயம் நம் நாட்டை அன்னிய ஆதிக்கம், அன்னிய கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து மானமும், அறிவும் பெறச்செய்வதையே கடமையாகக் கொள்ள வேண்டும்.
7.மாணவர்களிடம் கருத்துத் தெளிவு இருப்பது மிகவும் அவசியம். கருத்தில் குழப்பத்திற்கு இடம் தரலாகாது.கருத்துத்தெளிவு பெற நன்முறையில் ஆழ்ந்த சிந்தனையுடன் படிக்க வேண்டும்.
மாணவர் இலட்சியம்:
8.ஒவ்வொரு மாணவரின் இலட்சியமும், தான்
மனிதனாகப் பிறந்தது மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்றிருக்க வேண்டும்.
9.மாணவர்கள் நம்மால் மற்றவர்க்குத் தொல்லை இல்லாமல் நடந்து கொள்ளப் பழகவேண்டும்.
10.மாணவன் தன்னை இன்னவன் என்று உணர்ந்து கொள்வதும்,
எதையும் அறிந்து கொள்ளுகின்றதும் தெரியாதவைகளை கேட்டுத் தெரிந்து கொள்கிறதும்தான்
மாணவப்பருவம் என்பதை உணரவேண்டும்.
இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்து அறிவாளியாக விளங்கமுடியும்.
11.மாணவர்கள் சுயசிந்தனையுடன் இன எழுச்சி பெறவேண்டும். விஞ்ஞான அறிவுடன் தன்மானமும்,
ஒழுக்கமும் பெறத்தக்க வழியில் மாணவர்கள் நடக்க வேண்டும்.