கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரியில் மிக மிக குறைந்த கட்டணத்தில் நிறைவான கல்வித் தகுதியைப் பெற வாய்ப்பு...
B.Voc. Production Technology (Tool & Die)
B.Voc. Technology in Electrical and Electronic Devices மற்றும்
B.Voc. Automobiles
ஆகிய மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
இப்புதிய படிப்பின் சிறப்பம்சங்கள்:
• மாணவர்கள் தங்கள் அறிவையும், செயல் திறனையும் (Practical and Skill Training) மேம்படுத்த ஏதுவாக ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் முதல் நான்கு மாதங்களுக்கு கல்லூரியில் பாடப்பகுதிகள் நடத்தப்படும்.
• அடுத்த எட்டு மாதங்கள் மாணவர்கள் தொழில் பயிற்சி (Internship Training) மேற்கொள்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதே போன்று மூன்றாண்டுகளும்....
• இவ்வகையில் மாணவர்கள் தொழில் பயிற்சிக் காலங்களில் சுமார் 2 வருட கால தொழில் அனுபவங்களைப் பெற இக்கல்வி முறை உதவும்.
• இந்த படிப்பின் கட்டணம் அனைத்தும் மாணவர்கள் தொழில் பயிற்சிக்குச் செல்லும் தொழில் நிறுவனங்களில் இருந்து வழங்கப்படும். இறுதியாண்டு பயிற்சி பெற்ற அதே தொழில் நிறுவனங்களில் பணியும் வழங்கப்டுகிறது.
• அது தவிர மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்த கல்லூரியில் பல்வேறு பயிற்சிகளும் அவற்றிற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தொழில் நிறுவனங்கள்:
கீழ்க்கண்ட புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களுடன் நமது கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
1. ABT Maruti LTD, Coimbatore
2. Alpha Crafts (P) Ltd, Coimbatore
3. Roots India (P) Ltd., Coimbatore
4. Autotex Ancillaries (P) Ltd., Coimbatore
5. Microtech Automation, Coimbatore
6. Vasantha Advanced Systems, Coimbatore
7. Popukar Systems, Coimbatore
8. Sri Krishna Techno Components (P) Ltd., Coimbatore
9. Sri Andal Engineering Works, Coimbatore
10. Sree Ram Engineering, Coimbatore, Etc.,
பயன்கள்:
• மூன்றாண்டு நிறைவு செய்த பின் பாரதியார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பட்ட படிப்பிற்கான சான்றிதழ் வழங்கும்.
• NSDC (National Skill Development Council), கீழ் செயல்படும் Sector Skill Council, New Delhi மூலம் வருடம் ஒருமுறை மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த படிப்பில் சேர்வதற்க்குத் தேவையான கல்வித் தகுதி:
• +2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து பிரிவு (All Group) மாணவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
• +2 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள instant exam என்று சொல்லக் கூடிய உடனடி மறு தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த பாடப்பிரிவில் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இந்த நல்ல வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் பயனடைய அன்போடு வித்யாலயம் அழைக்கிறது...
மேலும் தொடர்புக்கு...
K.K. Hariharasudhan
Asst. Prof. of Electronic Devices
7010859338
Sri M. Arunprasath
Asst. Prof. of Tool & Die
9791533445
Sri R. Swami
Asst. Prof. of Automobiles
7904986432









