அதன்படி இறுதியாண்டு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது. தற்போது பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக சிறப்பான மென்பொருள் தயாரிக்கக்கூடிய பணியை அண்ணா பல்கலைக்கழகம் துவங்கியுள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நவீன மென்பொருளை தயாரித்து அதன் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக டெண்டரும் கோரப்பட்டிருந்தது. விரைவில் தனியார் நிறுவனங்கள் ஏதேனும் நவீன மென்பொருள் தயாரித்து, அண்ணா பல்கலைக்கழகத்திடம் அணுகும் போது அதனை முழுவதுமாக பரிசீலித்து அதன் பின்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்திருக்கிறது.