மாணவர்கள் வீடியோ பாடங்கள் படிப்பதை கண்காணிக்க வகுப்பிற்கு ஒரு 'வாட்ஸ் ஆப்' குழு அமைக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 10, பிளஸ் 2 மாணவர்கள்
வீட்டில் இருந்தே படிக்க புத்தங்கள் வழங்கி லேப்டாப்பில் வீடியோ பாடங்கள்
பதிவேற்றம் செய்துள்ளனர். கல்வித்தொலைகாட்சியில் பாடம் நடக்கிறது.
மாவட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பு கவனம் செலுத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தினமும் படிக்கிறார்களா என கண்காணிக்க
வகுப்பு வாரியாக 'வாட்ஸ் ஆப்' குழு துவக்கி, அதில் மாணவர்களை ஒருங்கிணைந்து
'கூகுள் மீட்' ஆப்பில் பாட சந்தேகங்களை தீர்க்க உதவ வேண்டும் என
ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுபாணி அறிவுறுத்தி
உள்ளார். 50 சதவீத அளவில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் வாட்ஸ் ஆப் குழு
செயல்படுவதாக தெரிவித்தார்.