வேலூர் CMC ஐ பற்றி அரியாத பல உண்மைகள்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வேலூர் CMC ஐ பற்றி அரியாத பல உண்மைகள்!


வேலூர் CMC ஐ பற்றி அரியாத பல உண்மைகள்!

வேலூர் ஒரு குட்டி வட இந்தியா மற்றும் வட கிழக்கு இந்தியாதான்.

ஏனெனில் இங்கே தினசரி பல ஆயிரம் நோயாளிகள் மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வருகிறார்கள்.

நாட்கணக்கில், மாதக்கணக்கில் தங்கி வைத்தியம் பார்க்க வேண்டிய நோயளிகள்  இங்கே குவிகிறார்கள்.
மத்திய அரசின் ஊழியராய் பணியாற்றும்  ஊழியர்களே இங்கே பெரும்பாலும் இங்கே  உள் நோயாளிகளாய் வந்து தங்கி வைத்தியம் பார்த்து செல்கிறார்கள்.
அவர்களுக்கு வடக்கேயே மருத்துவம் கிடைக்காத,,!!?
ஏன் அங்கெல்லாம் Aims, Nimans போன்ற பெரிய மருத்துவமனைகள் இல்லையா என கேட்காதீர்கள்.

இருக்கிறதுதான்.

ஆனால் அதையெல்லாம் தாண்டிய சிறப்பான மருத்துவ  உபகரணங்களும் கணிவான சேவையும் தரமான மருத்த்துவர்களும் ஒருங்கே அமைந்த  அதிநவீன  மருத்துவம் இங்கேதான் கிடைக்கிறது.

ஒரு சிறு துயரப்புள்ளியில் துவங்கிய வரலாறை தெரிந்துகொள்ளுங்கள்..

சேவைக்காக துவங்கப்பட்ட மருத்துவமனை இன்று பிரமாண்டமாய் வளர்ச்சியுற்று நிற்கிறது.

இங்கு இட ஒதுக்கீடு மேனேஜ்மெண்ட் கோட்டா என எதில் படித்தாலும், இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்து படித்து முடித்ததும் வெளிநாடு சென்று மருத்துவ பணி ஆற்றினாலும் உலகின் எந்த மூலையில் ஏதாவது ஒரு  மருத்துவ ஆராய்சியின் பலனாய் என்ன கிடைத்தாலும் அங்கே இருக்கும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மூலம் இங்கே உடனே வந்துவிடுகிறது,
அதனால் உலக தரமான Money minded இல்லாத சேவை கிடைக்கிறது.

இங்கே இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கிறது.

இங்கே படிப்பவர்கள் மருத்துவத்தை சேவையாக நினைக்கும் மனோபவத்திலேயே படிப்பதால், இங்கிருந்து வெளியே சென்றாலும் தான் படித்த கல்லூரிக்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக உலகெங்கிலும் இருந்து  மருத்துவதுவ துறையின் அனைத்து அப்டேட்களையும் செய்துவிடுகிறார்கள்.
இங்கிருந்து சென்ற மாணவர்கள்.

ஆக உலகத்தரமும், சேவையும், மத்திய அரசின் ஊழியர்களுக்கு எத்தனை லட்சம் செலவானலும் இங்கு வைத்தியம் பார்க்கும் கட்டணத்தை அரசே செலுத்திவிடுவதாலும்  அரசு ஊழியர்கள் இங்கே குவிகிறார்கள்,, குறிப்பாக தமிழகம் போன்ற மருத்துவ உட்கட்டமைப்பு இல்லாத மருத்துவதுறையில்  பின் தங்கிய மாநிலங்களில் பனியாற்றும் அரசு  ஊழியர்களே  இங்கே தினசரி குவிகிறார்கள்.

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் வந்து  நிற்கும் ஒவ்வொரு ரயிலிலும் நூற்றுக்கணக்காண நோயாளிகளும் அவரின் உறவினர்களும் வந்து இறங்குகிறார்கள்.

அவர்களை வேலுர் நகரத்துக்குள் அழைத்து செல்ல ஆயிரக்கணக்கான  ஆட்டோக்கள் ஓடுகின்றன .
நோயாளிகள் மருத்துவமனையிலும் இருந்தாலும் அவரோடு வரும் உறவினர்கள் வாரக்கணக்கில் மாதக்கணக்கில்  தங்க வீடுகள், அவர்கள் இங்கே தங்கும் சில நாட்களுக்காக  சமையல் செய்ய சிறிய அளவிளான  மளிகை சமான்  பேக்கிங்குகள், வீட்டு அளவுக்கு  சமையல் செய்யும் வாடகை  பாத்திரங்கள், வடகிழக்கு மாநில உணவகங்கள் என வேலுரே களை கட்டுகிறது..

இதெல்லாம் இங்கே இப்படி நடக்க ஒரே காரணம்  வேலூர் CMC மருத்துவமனை.

ஆம்,

அற்புதமான சேவை நோக்கிலான மருத்துவம்,
வேறெந்த தனியார் மருத்துவ மனைகளை காட்டிலும் அதிகப்படியான நவீன கருவிகளை  கொண்டு குறைந்த செலவில் தரப்படும் தரமான  மருத்துவத்தின் மீதான நம்பிக்கை,, இதற்காகவே இங்கே கூட்டம் குவிகிறது,
இதனாலேயே  மற்ற ஊர்களை காட்டிலும் வேலூர்  வித்தியாசமாகவும், புதுமையான விசயங்களோடும் இயங்குகிறது,

அங்கே வடக்கே  தரமான  மருத்துவம் இல்லையென்றே  வட நாட்டினர் இங்கே குவிகின்றனர், (அங்கே Train ஏறியது முதல் இங்கே மருத்துவம் பார்ப்பதுவரை எல்லாமே அரசின்  செலவு அந்த அரசு ஊழியருக்கு, இதனாலேயே வேறு வழியின்றி  தூரத்தை பார்க்காமல் தரமான மருத்த்துவத்தை  தேடி வருகின்றனர்)

இப்படிப்பட்ட உலக தரம் வாய்ந்த வேலுர் CMCயின் வரலாறையும்,,,
CMC மருத்துவமனையை உருவாக்கியவருக்கும், இந்த மத்திய மாநில அரசுகள் தரும் மரியாதையையும் தெரிந்துகொள்ள  கீழே உள்ள பிரஜாபதி எழுதிய  பதிவை முழுதாய் படியுங்கள்,,

(வெய்யிலூர் வேலூரில் நல்ல வெய்யில் சுள்ளுன்னு அடிக்கும்  நேரத்தில் CMC எதிரில்  ஞாண் விக்ஞான் வைஷ்ணவி பஞ்சாபி தாபா ஹோட்டலில்  ஜில்லுன்னு ஒரு  லெஸ்ஸியும்,
மாலை 6 மணிக்கு மேல்  CMC out gateல் பாதசாரிகளுக்காக Bell அடித்து நிறுத்தும் Signalக்கு முன்பு உள்ள பாய் கடையில்  இடியாப்பம் கபாப் சாப்ட்டு வந்தால்தான்  ஜென்ம சபால்யம் கிடைச்ச மாதிரி

அவள் பெயர் ஐடா ஸ்கேடர்(Dr. Ida Sophia Scudder): அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள்

அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த  இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்

தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன‌

என்ன சம்பவம்?

அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் ஒரு பிராமணர், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?

இல்லை அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் நான் வரட்டுமா என்கின்றார் அவர்

இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்கு பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும் , கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களை துடைத்துகொண்டே செல்கின்றார்

மறுநாள் அந்த கர்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, தன்னையறியாமல் ஐடாவும் அழுகின்றாள்

இருநாள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களை துடைத்துவிட்டு செல்கின்றார் அந்த இஸ்லாமிய கணவன்

மறுநாள் அதே ஊர்வலம்

மனதால் வெடித்து அழுதாள் ஐடா, என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்

அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு செய்ய தோன்றிற்று, நிச்சயம் இங்கு மகளிரை படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?

அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன‌

திரும்பி அதே வேலூருக்கு வந்தாள், இனி ஒரு கர்பிணியினைச் சாகவிடமாட்டேன் என சொல்லி அந்த மருத்துவனையினைத் தொடங்கினாள்

இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது. 

பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைகு வந்தனர். எந்த மத கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை

இந்நாட்டு பெண்களை படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் எனச் சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் அவள்.

அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தகால யதார்த்த வாழ்விற்கு எதை செய்ய முடியுமோ அதைச் செய்தாள்.

அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் வாழ்வு.

நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.

அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிக பிரகாசமாக ஒளிகொடுத்துக் கொண்டிருக்கின்றது

அதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரியாக இன்று வளர்ந்து நிற்கின்றது, உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர்.

அவள் யார்? அவளுக்கும் இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆனால் நம் மக்களுக்காக அழுதிருக்கின்றாள், நம் மக்களின் சாவினை தடுக்க டாக்டராகி திரும்பி வந்து இங்கு தன் வாழ்வினை அர்பணித்திருக்கின்றாள்

அன்னை தெரசாவிற்கு அவள்தான் வழிகாட்டி

அந்த வணங்கதக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றது.

அவளின் கல்லறை அதே வளாகத்தில்தான் இருக்கின்றது, நிச்சயம் இந்த நூற்றாண்டு விழாவில் அவள் கல்லறைக்கு அரசு மரியாதை செலுத்தபட்டிருக்க வேண்டும்.

அந்த வேலூர் மருத்துவமனை ஐடா ஸ்கேடரின் கனவு, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்களை அது காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது, இன்றுவரை இந்த நொடிவரை எத்தனையோ பேர் நலம்பெற்று கொண்டிருக்கின்றனர்.

அந்த பலன் பெற்றவர்கள் நிச்சயம் மனதில் வாழ்த்துவார்கள், அவர் தொண்டையும் அந்த மருத்துவமனை பற்றி அறிந்தவர்களும் இந்த 100ம் நினைவு ஆண்டில் அவளுக்கு மாபெரும் அஞ்சலியினை செலுத்தலாம்


அதில் பென்னிகுயிக்கும், ஐடாஸ்கேடரும்எந்நாளும்நினைவில்_நிற்பார்கள்


100 ஆண்டுகளை கடந்து இந்திய மக்களுக்கு பணிசெய்யும் அந்த மருத்துவமனை நிற்கும் வரை ஐடா ஸ்கேடர் வாழ்வார்

வாழ்வில் நாம் கண்டு கண்ணீர் வீடும் அதிசய கிறிஸ்தவர்களில் அந்த ஐடாவும் ஒருவர்.

அந்த மருத்துவமனை 100 அல்ல, 1000 ஆண்டுகள் இம்மக்களுக்கு தொண்டு செய்யும், காரணம் அதன் அடித்தளம் மிக மிக உன்னதமான மானிட நேயம் எனும் அஸ்திவாரத்தால் அமைக்கபட்டிருக்கின்றது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H