ஜாக்டோ ஜியோ காணொளி வழியாக நடைபெற்ற மாநில பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஜாக்டோ ஜியோ காணொளி வழியாக நடைபெற்ற மாநில பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 24.07.2020 வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.  இக் கூட்டமானது காலை 6 00 மணிக்குத் துவங்கி இரவு மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், செல்வம் தியாகராஜன் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர். இக்கூட்டத்தில் காணொலியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பாக, மாயவன், வெங்கடேசன், மோசஸ், சுரேஷ், சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன

 அஞ்சலி தீர்மானம் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடந்த ஜனவரி 2017 ல் துவங்கப்பட்ட நாள் முதல் மேற்கொண்ட அனைத்துப் போராட்ட இயக்க நடவடிக்கைகளில் நமது அமைப்பை முழுமையாக ஈடுபடுத்தி,தனது எண்பதாண்டு கால இயக்க அனுபவ முதிர்ச்சியோடு செயல்பட்டு, இன்று நம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ள மூத்த தோழர் பாவலர் க. மீனாட்சி சுந்தரம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 மேலும், கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோருக்கும் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் நாட்டுக்காக இன்னுயிரினை நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற காலவரையற்றப் போராட்டம் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அந்தப் போராட்ட காலத்தில் குற்றக் குறிப்பானைகள், காவல் துறை வழக்குகள், பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மறுப்பு ஆண்டு ஊதிய உயர்வு மறுப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளான 5100 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை இரத்து செய்யவும், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாக ஜாக்டோ ஜியோ உயர்பட்டக்குழுத் தலைவர்கள் பேட்ரிக் ரெய்மாண்ட் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள 17பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்ய வலியுறுத்திம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை ஜாக்டோ ஜியோ வாயிலாக சமர்ப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பின்னணியில், நடவடிக்கைகளை இரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

3) எதிர்வரும் 29.07.2020 புதன்கிழமை அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் துறைச் செயலாளர்கள் ஆகியோரிடமும் கல்வித் துறை/ கல்லூரி கல்வித் துறை இயக்குநர்களிடம் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர்

4) 29.07.2020 புதன்கிழமை அன்று மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ பாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 27.07.2020 அன்று மாவட்டத்திலுள்ள உயர்மட்டக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தினை தனி மனித இடைவெளியோடு நடத்தி, 29.07.2020 அன்று நடைபெறவுள்ள இயக்கத்திற்கு திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இவண்

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H