🇮🇳 இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம், வன்முறை, சர்வாதிகாரம் ஆகியவைதான் நினைவிற்கு வரும்.1971 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பின் பாகிஸ்தான் இந்தியாவுடன் நேரடியாக மோதலைத் தவிர்த்து மறைமுகமாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ஐஎஸ்ஐ மூலமாக பயங்கரவாதத்தை தூண்டி வந்தது.1999 ஆம் ஆண்டு அசட்டுத் துணிச்சலுடன் பாகிஸ்தான் ஈடுபட்ட காரியம் கார்கில் ஊடுருவல்.குளிர்காலத்தில் உயரமான சிகரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதில் இருந்து இருநாட்டு வீரர்களும் பின் வாங்குவார்கள். கோடைகாலத்தில் தொடக்கத்தில் மீண்டும் தங்களது வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணியத் தொடங்குவார்கள்.
🇮🇳 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் முன்பே திட்டமிட்டபடி தங்களது படைவீரர்கள் ஏறத்தாழ 5000 பேரை இந்தியாவின் கார்கில் பகுதியில் ஊடுருவிய செய்திருந்தது பாகிஸ்தான். இதற்கு பதிலடி தரும் வகையில் மே மாதம் இந்தியா ஆபரேஷன் விஜய் (Operation vijay )என்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வெகு வேகமாக முன்னேறியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு கண்டனமும் வலுத்தது. வேறு வழியே இல்லை என்ற நிலையில் பாகிஸ்தான் பின்வாங்கியது. ஜூலை 26ல் இந்த போர் நிறைவடைந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கார்கில் பிரதேசத்தில் அகற்றப்பட்டது. இந்தப் போரின் விளைவாக பாகிஸ்தானில் நம்பகத்தன்மை குறைந்தது நவாஸ்ஷெரிபின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்தப் பட்டது இந்தியாவின் இராணுவ வல்லமை பறைசாற்றப்பட்டு ஜூலை 26ம் தேதி கார்கில் போர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.








