''மனிதத்தை மலர வைப்போம்...!"
................................................................
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் ; மதித்து நடத்தல் வேண்டும்....!
நாம் தெரிந்தோ,தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனதில் பதியவைத்துக் கொள்கிறோம்...
நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அத்தோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்துகொண்டு வருகிறோம்...
மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியை விட, வெறுப்புணர்ச்சிதான் அதிகமாகக் காணப்படுகிறது...

இன்றைய நாளில் சமயப்பற்று காரணமாக, சாதிப் பற்று காரணமாக, வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்...!
இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறோம். எந்த மனிதனைப் பற்றியும் ஆலோசிக்காமல் தன்நலம் தாங்கி இருப்பவர்களை நாம் எதில் கொண்டு சேர்ப்பது...?
குறிப்பாக இந்த எண்ணம் படிக்காத பாமர மக்களைக் காட்டிலும், படித்தவர்களிடத்தில்தான் அதிகமாக இருக்கிறது, நல்ல மனிதர்கள் என்றால் நிகரான மனிதனையும் மதித்து நடக்க வேண்டும்...
அவர்களின் நடத்தைதான் மற்ற மனிதனை அன்புடன் வாழ வகை செய்யும். ஆனால்!, யார் இப்படி இன்று நடந்து கொள்கின்றார்கள்...?
எவரும் மற்றவர்களை மதித்து நடக்கக் கூட ஒரு நிமிடம் ஆலோசிக்கத்தான் செய்கிறார்கள். மனிதனே மனிதனை மதிக்காத போதுதான் மனிதனின் மனம் வாழ்க்கையை வெறுத்து வெறுமையாகிவிடுகிறது...
ஒருவர் செய்கிற செயலோ, பேசுகிற பேச்சோ, நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூளையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்பு உணர்ச்சியைப் பதிவுசெய்து விடுகிறது...
சகிப்பு தன்மை உடையவராக, சினத்தைக் குறைத்து, கண்ணியத்தை கடைபிடிப்பவராக, மனித நேயராக புதிய உலகத்தை நோக்கி நகர்த்த ஆரம்பித்தோம் என்றால் நற்குணங்களின் சுவையை உணரத் துவங்குவோம்...
ஆம் நண்பர்களே..!
காலம் கடந்தாலும் தாழ்வில்லை, நமக்கு நாமே குருவாக, நண்பனாக இருந்து தன்னறிவோடு ஒரு புதிய வாழ்வை உணர்வோம்...!
நிகரான மனிதர்களை மதித்து மனிதனாக வாழ்வது எப்படி...? என்பதைக் கற்றுக் கொள்வோம்....
மனிதனை மதிப்போம்.உலகில் மனிதத்தை மலர வைப்போம்...
மனிதனைத் துண்டாக்கும் ஜாதியையும் மதத்தையும் தூக்கிக்கொண்டு அலையாதீர்கள்!