மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஆசிரியர்
பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து
நிறுவன முதல்வர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பள்ளி கல்வி
இயக்ககத்தின் கீழ இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி
நிறுவனத்தில் 2020-21 ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்
படிப்பு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இப்பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பொதுப்பிரிவினர் மேல்நிலை பள்ளித்
தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதமும், ,
அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல்
வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும்.
அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 27 ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை
அனைத்து அலுவலக நாட்களிலும், லாஸ்பேட்டை தொல்காப்பியர் வீதி, மாவட்ட
ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், பள்ளி கல்வித்துறை இணையதளம் dse-edn.pon@nic.in ல்
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை தேவையான நகல் சான்றிதழ்களுடன், வரும் 7 ம் தேதி மாலை 5:00
மணிக்குள் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.








