மேஷ ராசி
எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. உடன் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். வரவுகள் சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகம் ஏற்படும் என்பதால் கவனமாக செலவு செய்வது அவசியம். வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.தொழிலில் சற்று சங்கடங்களை சந்திக்கக் கூடும். பங்குதாரருடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உத்தியோஸ்தர்களுக்கு பணிச்சுமை இருக்கும். அதனால் திட்டமிட்டு வேலையை செய்வது அவசியம்.
ரிஷப ராசி
நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தாராளமான பண வரவு இருக்கும் என்பதால் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலைப் பொறுத்தவரையில் தேக்கங்கள் நீங்கி நல்ல லாபம் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் தவழும்.
மிதுன ராசி
உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த இழுபறியான நிலை, நெருக்கடியான நிலை மாறும்.
கடக ராசி
தொழில், உத்தியோகத்தில் புதிய உத்தியைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வர வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக இருந்த தடைப்பட்ட பணம் வரவாகும். அதன் மூலம் வீட்டின் நிதி பற்றாக்குறைகள் தீரும். உத்தியோத்தினருக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி மாறி சாதகமாகும்.
சிம்ம ராசி
ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பது அவசியம். வாகனத்தில் செல்லும் போது மிக கவனமாகவும், நிதானமாகவும் செல்வது அவசியம்.பொதுவாக எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் கவனமாக செய்வது அவசியம். பண விஷயத்தில் மிக கவனமாகவும், சிக்கனமாகவும் இருப்பது அவசியம். பொதுவாக அதிக முதலீடுகளில் ஈடுபடுவது தள்ளிவைப்பது அவசியம்.
கன்னி ராசி
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பொருளாதார மேம்பாடு கிடைக்கும். சிலருக்கு தேவையான இடத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.நண்பர்களின் ஆதரவு சிறப்பக இருக்கும். தொழில் ரீதியாக கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அதனால் பெரிய நெருக்கடியைக் கூட எளிதில் சமாளித்துவிடுவீர்கள்.
துலாம் ராசி
உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணப்புழக்கம் மிக நன்றாக இருக்கும். இதனால் நிதி நெருக்கடியை எளிதாக சமாளிப்பீர்கள். உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூரிலிருந்து குறிப்பிடத் தகுந்த நல்ல விஷயங்கள் வருவதற்கான நல்ல நாள்.தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தைப் பொறுத்த வரை உங்களுக்கு இருந்த நெருக்கடி நிலை மாறி சாதகமான நிலை ஏற்படும். தேக ஆரோக்கியம் சிறப்பகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள்.
விருச்சிக ராசி
தொழிலில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருந்தாலும், உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு இருக்கும் என்பதால் அனைத்தையும் சமாளித்து முன்னேறுவீர்கள்.
தனுசு ராசி
தொழில் ரீதியாக பொருள் தேக்கம் ஏற்படக் கூடும். வேலையாட்களின் ஒத்துழைப்பு பெரிய ஒத்துழைப்பு இருக்காது. அவர்களுடன் நிதானமாக செயல்படவும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது.
மகர ராசி
பொருளாதார ரீதியான நல்ல மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மையும், தொழிலில் லாபமும் ஏற்படும் இனிய நாள்.
கும்ப ராசி
தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகி அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புளது.









