நீட் (NEET) மற்றும் ஜேஇஇ (JEE) தேர்வர்களுக்கு, 10 லட்சத்துக்கு மேற்பட்ட முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை தயாரித்து வழங்க தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 1 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஜேஇஇ (JEE) தேர்வையும், செப்டம்பர் 13 நீட் (NEET) தேர்வையும் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. ஜேஇஇ (JEE) தேர்வு எழுத நாடு முழுவதும் 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்வு நடைபெறும் 660 தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் 1 லட்சத்து 14 ஆயிரம் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு வழங்க 10 லட்சம் முகக் கவசங்கள்கையுறைகள் மற்றும் 6500 லிட்டர் கிருமி நாசினிகளை தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கென வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக 13 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.செப்டம்பர் 1 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஜேஇஇ (JEE) தேர்வையும், செப்டம்பர் 13 நீட் (NEET) தேர்வையும் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. ஜேஇஇ (JEE) தேர்வு எழுத நாடு முழுவதும் 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்வு நடைபெறும் 660 தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் 1 லட்சத்து 14 ஆயிரம் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு வழங்க 10 லட்சம் முகக் கவசங்கள்கையுறைகள் மற்றும் 6500 லிட்டர் கிருமி நாசினிகளை தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.