12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார
(ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 3) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்
துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உங்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.
உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வீண்
அலைச்சல் குறையும். அவசியமான வேலைகளுக்கு தேவையான பணம் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு
அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்புக்கு
பாத்திரமாவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு
மகசூல் பெருகி நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் குறைபாடுகள்
உண்டாகும். அதனால் கோபம் அடையாமல் செயல்படவும். கலைத்துறையினர் பேச்சுத்
திறமையால் அனுகூலம் அடைவார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு
பெறுவீர்கள். தேவைக்கேற்ற பண வரவு கிடைக்கும். ட்டுக்கடங்காமல் இருக்கும்;
அதனால் சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம்
செலுத்தவும். விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றியைப்
பெறுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை தினமும் பானகம் வைத்து வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 28, 29.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். செய்தொழிலில் இருந்த போட்டிகள்
மறையும். உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த
வில்லங்கங்கள் மறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பலன்கள்
கிடைக்கும். மேலதிகாரிகளின் நட்பு தொடரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்,
வாங்கல் நன்றாக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும்.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். இதனால் புதிய வசதி வாய்ப்புகள்
பெருகும்.
அரசியல்வாதிகள் முயற்சிக்கு ஏற்ற
பொறுப்புகளைப் பெறுவீர்கள். தொண்டர்களுக்கு நேசக்கரம் நீட்டினால் பாசக்
கரம் தொடரும். கலைத்துறையினர் கடினமாக உழைத்து அதற்கேற்ற வருமானத்தைப்
பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில்லறை
செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
மாணவமணிகள் படிப்பில் கூடுதல் ஆர்வம் செலுத்தவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 30, 31.
சந்திராஷ்டமம்: 28, 29.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
கவலைகள் மறைந்து சந்தோஷம் பெருகும்.
பேச்சாற்றல் அதிகரிக்கும். பொருளாதார வளம் சீராக இருக்கும். குடும்பத்தில்
சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து
கொள்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில்
நிலவிய பிரச்னைகள் நீங்கும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைக்
குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். விவசாயிகளுக்கு லாபம்
குறையும். காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் போன்றவற்றைப் பயிரிட்டு
வருமானம் பெறலாம்.
அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில்
அனுகூலமான திருப்பம் ஏற்படும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச்
செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். கணவரிடம்
அன்னோன்யம் தொடர அனுசரித்து நடந்து கொள்ளவும். விட்டுக்கொடுத்து செல்வது
உசிதம். மாணவமணிகள் விளையாட்டுகளைக் குறைத்துக்கொண்டு படிப்பில் அக்கறை
செலுத்தவும்.
பரிகாரம்: திங்கள்கிழமை பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 29, 01.
சந்திராஷ்டமம்: 30, 31.
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
எடுத்த காரியங்கள் அனைத்தும் இனிதே
நிறைவேறும். பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை
நடத்தி மகிழ்வீர்கள். உங்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல
முடிவுக்கு வரும். சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மனதில் நிலவிய
குழப்பங்கள் அகலும்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம்
ஒத்துழைப்புடன் நடந்துகொள்வீர்கள். பணவரவு இரட்டிப்பாக இருக்கும்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான வருமானத்தைக் காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும்.
புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான்
அதிக பலன்களை அடைய முடியும். பெண்மணிகள் யார் எதைச் சொன்னாலும் நன்றாக
யோசித்து முடிவெடுக்கவும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக்
கொடுத்து நடந்து கொள்வது நல்லது. மாணவமணிகள் எடுக்கும் முயற்சிகள் அதிக
மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்தும், வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதும் உத்தமம்.
அனுகூலமான தினங்கள்: 29, 02.
சந்திராஷ்டமம்: 01, 02, 03.
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள்
நேசக்கரம் நீட்டுவார்கள். புதிய வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் செய்தொழிலில் தொய்வு ஏற்படாது. உங்களின்
மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் வராது.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு
பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் கடன் கொடுத்து
வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு சக விவசாயிகளே
புதிய குத்தகைகளைப் பெற உதவி செய்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு நல்ல திருப்பங்கள்
ஏற்படும். அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆனாலும் பணவரவில் தாமதம்
ஏற்படும்.
பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை
வாங்குவீர்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனதிற்கினிய
நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். மாணவமணிகள் தங்களது ஞாபகசக்தி
மேம்பட விடியற்காலையில் கல்விக்கான பயிற்சிகளில் ஈடுபடவும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 28, 02.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி
முடியும். வருமானம் உயரும். வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். புதிய வீடு
கட்டும் முயற்சியில் ஈடுபடலாம். உறவினர்களின் உதவிகளையும் பெறுவீர்கள்.
நம்பிக்கையுடன் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். பேச்சில் உஷ்ணமான
வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டாம்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள்
அனைத்தும் சுமூகமாக முடியும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம்
கிடைக்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும்
அதிகரிக்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச்
செய்வீர்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை
ஏற்படும். எனவே பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். கணவரிடம் அனுசரித்து
நடந்து கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். உள்ளரங்கு
விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்கி வர நலன்கள் கூடும்.
அனுகூலமான தினங்கள்: 28, 01.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
உடல் நலத்தில் அக்கறை காட்டவும். மனதில்
சிறு குழப்பங்கள் ஏற்படும். முயற்சிகளில் தடங்கல்கள் உருவாகும். அலைச்சல்
அதிகரிக்கும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். பொருளாதார நிலையில்
இழுபறி தொடரும்; எனவே தேவைகளைக் குறைத்துக் கொள்ளவும்.
உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்
பளுவும் அதிகரிக்கும். முக்கிய பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள்
கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் அதிக மகசூலைப்
பெறுவீர்கள் கால்நடைகளைப் பராமரிக்கும் செலவுகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் நிதானமாகச் செயல்படவும்.
மேலிடத்துக்கு தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் புதிய
ஒப்பந்தங்களைப் பெறுவதில் தடைகள் ஏற்படும். பெண்மணிகளுக்கு கணவருடனான
ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் அனைவரையும் அனுசரித்து செல்லவும். பேசும்
வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகள் சக மாணவர்களுடன் வீண் விவாதத்தில்
ஈடுபடவேண்டாம். பிராணயாமம் செய்யவும்.
பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 30, 31.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
மலைபோல் வரும் துன்பங்கள் பனிபோல்
விலகிவிடும். பொருளாதார நிலைமை சுமாராகவே இருக்கும். வாகனங்களில்
செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். பேச்சில் சூடான வார்த்தைகளைப்
பேச வேண்டாம். செயல்களில் குறுக்கு வழிகளை நாட வேண்டாம். இறைவழிபாட்டில்
ஈடுபடவும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை
அதிகரிக்கும். ஆனாலும் தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். வியாபாரிகள்
கவனத்துடன் இருந்தால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். விவசாயிகளுக்கு
மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகளால் பெரிய லாபம் ஏற்படாது.
அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி
மற்றவர்களைக் கவர்வீர்கள். இருப்பினும் கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு
ஆளாகாமல் நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து
சேரும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பார்கள். மாணவமணிகள்
கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்கவும்.
பரிகாரம்: சிங்காரவேலனை மனதார நினைத்து வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 28, 31.
சந்திராஷ்டமம்: இல்லை.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 03 வரை
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். திட்டமிட்ட வேலைகள்
அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக
இருப்பார்கள். தேவை ஏற்பட்டாலொழிய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்கவும்.
மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு லாபம்
அதிகரித்தாலும் கூட்டாளிகளுடன் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகளுக்கு
மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். கால்நடைகளால் பலன் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில்
அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு கடின
முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள்
குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். கணவரின் உடல் நலத்தில் கவனம்
செலுத்துவீர்கள். தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். மாணவமணிகள் படிப்பில்
கவனம் செலுத்தவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும்.
பரிகாரம்: ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரை வியாழக்கிழமைகளில் வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 01, 02.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உறவினர்களும் நண்பர்களும் நேசக்கரம்
நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க யோகா, பிராணாயாமம்
போன்றவற்றில் ஈடுபடவும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு
பொருளாதார நிலை மேலோங்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும்
குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு அதிக விற்பனையால் லாபம் பெருகும். விவசாயிகளுக்கு மகசூல்
மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகை எடுப்பதைத் தள்ளிப்போடவும்.
அரசியல்வாதிகள் அவசர அவசரமாகச் செய்யும்
கட்சிப் பணிகளில் இடையூறுகள் ஏற்படும். யோசித்து செயல்படவும்.
கலைத்துறையினருக்கு கைநழுவிப் போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி
உண்டாகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கணவர் வீட்டாருடன்
அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்
ஆன்மிகத்தில் மனதைச் செலுத்தினால் மேலும் மேன்மை அடையலாம்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 31, 03.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும்.
எதிரிகளும் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். வருமானத்தில் முன்னேற்றம்
தென்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடலாம்.
இல்லத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். மன மகிழ்ச்சி ஏற்படும்.
உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவும்.
உத்யோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த
பிரச்னைகள் விலகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரிகளுக்கு
கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய
நிலங்களை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம்
அனுகூலமாக நடந்து கொள்ளும். தொண்டர்களுக்கு நேசக்கரம் நீட்டினால் பாசக்
கரம் தொடரும். கலைத்துறையினருக்குத் திறமைக்கு தகுந்த மதிப்பும்,
அங்கீகாரமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் பாசம்
அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
மாணவமணிகள் தினமும் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பெற்றோர் சொற்படி நடக்கவும்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 02, 03.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
அனைத்து செயல்களும் நினைத்தபடியே
நிறைவேறும். ஆனாலும் பெரிய திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது.
சேமிப்புக்கு வழியிருக்காது. மற்றபடி பொருளாதார நிலை சீராகவே இருக்கும்.
பெற்றோருக்கு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்; கவனத்துடன் இருக்கவும்.
சில உறவினர்களிடமிருந்து ஒதுங்கியே இருக்கவும்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
முக்கிய பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வரவுக்கேற்ற செலவுகள்
ஏற்படும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
பெண்மணிகளுக்கு ஆன்மிகத்தில் ஆர்வம்
அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மனக்
குழப்பங்கள் தீரும். மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றி பெறக்
கடின முயற்சி தேவை. சக மாணவர்களுடன் வம்பு வழக்குகளில் ஈடுபடவேண்டாம்.
உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.
பரிகாரம்: துர்க்கையையும், ஸ்ரீகிருஷ்ணரையும் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 28, 03.
சந்திராஷ்டமம்: இல்லை.