
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல்
ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள்
உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும்,
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
எ.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.30 ஆயிரம்!!
எ.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.30 ஆயிரம்!!
நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : M.Sc Analytical Chemistry, M.Sc Biotechnology, M.Sc
Chemistry, M.Sc Environmental Science, B.Tech Chemical Engineering, B.E
Environmental Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு 30 வயதிற்கு
உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு
விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின்
சுயவிவரத்தை hzcparecruit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.08.2020
தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்
பெறவும் https://www.neeri.res.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள
பக்கத்தைக் காணவும்.







