கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால், இதையே நம்பியுள்ள 35 ஆயிரம் வாகனங்கள் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவாகனங்கள் இயக்கப்படுகின்றன. கரோனா
வைரஸ் தொற்று கட்டுக்குள் வராததால் பள்ளி, கல்லூரிகள் இன்னும்
திறக்கப்படவில்லை. இதையே நம்பியுள்ள வாகனங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக
முடங்கி உள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளி வாகனம் கூட்ட மைப்பு நலச்சங்க பொதுச்செயலாளர் எஸ்.பென்ஜமின் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரி
வாகனங்கள் நீண்ட நாட்களாக ஓடாமல் முடங்கியுள்ளன. இதனால், எங்களுக்கு பெரிய
அளவில் வருவாய் இழப்புஏற்பட்டுள்ளது. வாகன கடனுக்கு வட்டி கட்ட முடியாமல்
தவித்து வருகிறோம். எனவே, 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்துசெய்வதோடு, வாகன
காப்பீட்டை 6 மாதத்துக்கு நீட்டிப்பும் செய்ய வேண்டும். மேலும், இ-பாஸை
ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.







