மாநிலங்களுக்கு இடையே பயணிக்க எந்த தடையும் விதிக்க கூடாது என
மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இ-பாஸ் ரத்து செய்யப்படுமா என்ற
கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.








