மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில், 'இ- - பாஸ்' நடைமுறை
ரத்து செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு,
தலைமைச் செயலர் சண்முகம் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல; பிற மாநிலங்களுக்கு செல்ல, இ- - பாஸ் கட்டாயமாகி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இ- - பாஸ் நடைமுறையை கைவிடும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன்,
தலைமை செயலர் சண்முகம், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை
நடத்தினார். அப்போது, இ- - பாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பாக,
கலெக்டர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல; பிற மாநிலங்களுக்கு செல்ல, இ- - பாஸ் கட்டாயமாகி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இ- - பாஸ் நடைமுறையை கைவிடும்படி உத்தரவிட்டுள்ளது.
கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் பேசியதாவது :தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இ -- பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால், தொற்று பரவல் குறைவாக உள்ளது. மாவட்டங்களில் தேவைக்கேற்ப பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இறப்பு விகிதத்தை குறைக்க, உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் முகாம் அதிகம் நடத்தப்பட வேண்டும்.
மக்களிடம் நோய் தொற்று குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பரிசோதனை அதிகரிக்கும்போது, நோய் தொற்று அதிகமிருப்பதை கண்டறிய வாய்ப்புள்ளது. எனவே, அதற்கேற்ப தேவையான படுக்கை வசதி, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துக்களை, முதல்வரிடம் தலைமை செயலர் தெரிவித்த பின், இ - -பாஸ் நடைமுறையை ரத்து செய்யலாமா; வேண்டாமா என்று, முதல்வர் முடிவு செய்வார் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.







