தேவையான பொருட்கள்;
1. மாவிலை (மா இலை) 4
2. வெந்தயம்- 1 டீஸ்பூன்
இந்த இரண்டு பொருள் தான் உங்களின் சர்க்கரை அளவை 10 நாட்களில் குறைத்து காண்பிக்கும்.
1. நான்கு மாவிலைகளை எடுத்து நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு சிறு சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுப்பில் வாணலி சட்டியை வைத்து இந்த இலைகளை சட்டியில் போட்டு நன்கு வறுக்கவும். எண்ணெய் பயன்படுத்த வேண்டாம்.
3. இலையின் நிறம் மாறியதும் அதில் 1 ஸபூன் வெந்தயத்தை போட்டு வறுக்கவும்.
4. வெந்தயம் நன்கு வறுப்பட்டவுடன் இதனை எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு இளம் சூடான தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் மூடி வைத்துவிட்டு அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் பத்து நாட்கள் குடித்துவர சர்க்கரை கட்டுக்குள் வரும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு பத்து நாட்கள் எடுத்து வந்து, அடுத்த வாரம் சர்க்கரை அளவை மருத்துவமனையில் பரிசோதித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களது சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கும்.









