ஒரு இளைஞனாய் அபரிமிதமான லட்சியங்களுடன் இருக்கும் நபராக இருந்தாலும் சரி, வாழ்க்கையை ஓட்டுவதற்கே கஷ்டப்படும் இளைஞனாக இருந்தாலும் சரி – இதுபோல எண்ணற்றப் பல சூழ்நிலைகளிலும் உங்களுக்கு முக்கியமான எதிரி எது தெரியுமா?
அகங்காரத்தைத் தவிர, வேறேதும் இல்லை.
எனக்கா, அகங்காரமா, சே சே, அதெல்லாம் என்கிட்டே கொஞ்சங்கூட இல்ல பாஸ்’ என்று நீங்கள் சத்தியம் செய்வீர்கள். ‘நாங்கெல்லாம் எல்லாத்தையும் சரிசமமா எடுத்துக்குவோம் இல்ல’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் லட்சியம், திறமை, செயல் திறன், ஊக்கம், எடுத்த காரியத்தை முடிக்கும் மனநிலை போன்ற குணங்களைக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அகங்காரம் என்பது வரவே செய்யும். நம்மை நல்ல சிந்தனையாளர்களாகவும் செயல்வீரர்களாகவும் புதுமையான நடவடிக்கைகளை மேற் கொள்பவர்களாகவும் தொழில்முனைவோராகவும் எது உருவாக்கு கிறதோ, அதனுடைய இருண்ட மறுபக்கம் அகங்காரத்தையும் தருவதாக இருக்கும்.
அகங்காரம் நம்மை நம்முடைய உண்மையான நிலையைவிட மேலானவர் என்று போலியாக உணரவைக்க வல்லது. இதனாலேயே நம்முடைய இயல்பான நிலையில் நமக்குக் கிடைக்கவேண்டிய வெற்றியைக்கூட நமக்குக் கிடைக்காமல் அது செய்துவிடுகிறது. நமக்கும் நிஜ உலகுக்கும் இருக்கும் தொடர்பைப் பொய்யானதாக்கி நிஜத்தை நம்மை உணரச் செய்யாமல் நிறுத்தவல்லது இது.
நாம் எல்லோருமே வெற்றி பெறவே நினைக்கிறோம். நம்மை அனைவரும் முக்கிய மானவராகக் கருதவேண்டும் என நினைக்கிறோம். பணம், வசதி, அங்கீகாரம் என்பதெல்லாம் மிகச் சிறந்தது என்ற கருத்துடன் வாழ்கிறோம். அதனாலேயே இவை அனைத்தும் நமக்குத் தேவை என்று நாம் ஆழமாக நம்புகிறோம். இதை அடைவதற்குப் பணிவு என்பது உதவாது என்று மூளைச்சலவையும் செய்யப்பட்டிருக்கிறோம்.
‘பணிவா, பணிந்தால் எல்லாம் ஏறி மிதித்து விட்டுப் போய்விடுவார்கள் பாஸ்’ என்று நாம் சுலபமாக சொல்லிவிடுவோம். அது இல்லவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள நாற்பதுகளில் இருக்கும் பலரையும் கேட்டுப் பாருங்கள். ‘பணிவை விட்டு நானேதான் எல்லாம்’ என்று ஆரம்பித்த பலரும் ஆரம்பத்தில் ஒரு சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், தொடர் வெற்றிகளைப் பெற்று சிறப்படைவதில்லை. அகங்காரம் அவ்வப்போது வெற்றி தரும். அகங்காரமின்மை பெரிய வெற்றிகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
நம்மைப் பற்றிய ஒரு கட்டுக்கதையை நாமே உருவாக்கி அதை நம்பி விடாமல் இருத்தல், நமக்கு எது வேண்டும் என்பதில் தெளிவாக இருத்தல், என் தகுதிக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற நினைப்பில் இல்லாமல் இருத்தல், நம்மை நாமே சரிவர நிர்வகித்தல் போன்றவற்றைக் கடைப் பிடித்தால் அகங்காரம் நம்மை விட்டு அகலும்.