சென்னை; கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுார் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும்
மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பொதுப்பணி துறையில், சிறப்பு
பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
பொதுப்பணி துறையில், மருத்துவ பணிகள் பிரிவு வாயிலாக, அரசு மருத்துவமனைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை, திருச்சி, மதுரையில், இதற்காக, மூன்று கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மருத்துவ
பணிகள் பிரிவில் உள்ள கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும்
செயற்பொறியாளர்கள், கூடுதல் பணிச்சுமையில் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுார் மாவட்டங்களில், புதிய அரசு
மருத்துவ கல்லுாரிகள்அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக,
தலா, 391 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமான
பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன.திருச்சி மற்றும் வேலுார் மாவட்டங்களில்
இருந்து சென்று, இப்பணிகளை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனிக்க
வேண்டியுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, மருத்துவ
பணிகள் சிறப்பு பிரிவை, அரசு உருவாக்கியுள்ளது. பொதுப்பணி துறையில், மருத்துவ பணிகள் பிரிவு வாயிலாக, அரசு மருத்துவமனைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை, திருச்சி, மதுரையில், இதற்காக, மூன்று கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதற்காக, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் கீழ், கள்ளக்குறிச்சி சிறப்பு பிரிவு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில், 12 கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளனர்.இதேபோன்று, மருத்துவ பணிகள் பிரிவிற்கும், கூடுதல் கண்காணிப்பு பொறியாளர்களை நியமிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.