தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு-கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக் கோரியும், கொரோனா சிகிச்சையில் முறைகேடுகள் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.* - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 9 August 2020

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு-கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக் கோரியும், கொரோனா சிகிச்சையில் முறைகேடுகள் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு-கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக் கோரியும், கொரோனா சிகிச்சையில் முறைகேடுகள் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.*
*_தஆஆகூ/மா அ/கடித எண்: 35/2020, நாள்: 07.08.2020_*
*_பெறுநர்_*
⚡1. மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡2. மாண்புமிகு, நிதியமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡3. மதிப்புமிகு, தலைமைச் செயலாளர்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡4. மதிப்புமிகு. முதன்மைச்செயலாளர்,
நிதித்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡5. மதிப்புமிகு. ஆணையாளர்,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை,
3-வது மாடி, கால்நடை மருத்துவமனை வளாகம்,
அண்ணாசாலை, நந்தனம்,
சென்னை-600 635.
*மாண்புமிகு ஐயா,*
*_பொருள் :_*
*🛡️கல்வி - பள்ளிக்கல்வி - அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - கொரானா சிகிச்சைக்கு அரசாணை எண் : 279 நிதித்துறை நாள்: 24.06.2020ன் படி கட்டணமில்லா சிகிச்சை கோருதல் - சார்பு.*
*_பார்வை :_*
*🛡️1. அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020*
*🛡️2. அரசாணை எண்: 280 நிதித்துறை நாள்: 24.06.2020.*
*🛡️தமிழக அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கானஅறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 1/2 இலட்சமும் வழங்கி வருகின்றது.*
*⚔️*
*🛡️தற்போது கொரானா எனும் கொடும் தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்இவ்வேளையில் ஆசிரியர் அரசு ஊழியர்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நல்லெண்ணத்துடன் தமிழக முதலமைச்சர் இச்சிகிச்சைக்கு ஆகும் செலவுத் தொகையை மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளஏதுவாக பார்வை 2-ல் கண்ட அரசாணை எண்: 280 நிதித்துறை நாள் 24.06.2020-ன்படி 01.03.2020 முதல் 26.04.2020 முடிய இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கான செலவுத்தெகையை மீள பெற்றுக்கொள்ளவும்,*
*⚔️*
*🛡️பார்வை 1-ல் அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020 - ன் படி 01.07.2020 முதல் இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் ஓராண்டுக்கு தொடர்வதாகவும், இத்திட்டத்தின் கீழ் கொரானா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்குரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு 7 1/2இலட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.*
*⚔️*
*🛡️இந்நிலையில் 01.07.2020 க்கு பிறகு கொரானா தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பார்வை 2-ல் கண்ட அரசாணை எண்: 280 நிதித்துறை நாள்: 24.06.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி மட்டுமே கட்டணம் (Package) வழங்கப்படும் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றார்.*
*⚔️*
*🛡️01.07.2020-க்கு பின் ரூ.7% பார்வை 1-ல் கண்ட அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020 - ன் படி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஓராண்டிற்கு தொடர்கின்ற நிலையில் அரசாணையில் குறிப்பிட்டபடி கொரானா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கானஅறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 1/2 இலட்சம் வழங்குவது என்பது மீறப்படுகிறது,*
*⚔️*
*🛡️ஆகவே இவ்விசயத்தில் தமிழக அரசு உடன் தலையிட்டு 12 இலட்சம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பார்வை 1-ல் கண்ட அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020-ன் படி காப்பீட்டு நிறுவனம், கொரானா சிகிச்சைக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்குமா? என்பது பற்றி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*
சென்னை
07.08.2020
_இப்படிக்கு,_
*_ச. மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H