நீட், ஜே.இ.இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக
வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்டம்பர் 13ம்
தேதியும், ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் ஒன்று முதல் 6-ம் தேதி வரையும்
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு 15,97,000 பேரும்,
ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 பேரும் பதிவு செய்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.







