🌏♈🌏கொரோனா காரணமாக இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
🌏♈🌏கோவை ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(19). இவர் கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமியில் பயின்று வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று பல்மருத்துவம் படிக்க சீட் கிடைத்தபோதும் அதை நிராகரித்துள்ளார்.
🌏♈🌏பொதுமருத்துவம் படிக்க ஆசைப்பட்ட சுபஸ்ரீ இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனிடையே இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்று சுபஸ்ரீ மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் சுபஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுடார்.
🌏♈🌏இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.








